அமித்ஷா மகன் ஜெய் ஷாவுக்கு திடீரென 80 கோடி லாபம் எப்படி கிடைத்தது ?  ராகுல் காந்தி  சரமாரி கேள்வி ? 

 
Published : Oct 09, 2017, 08:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
அமித்ஷா மகன் ஜெய் ஷாவுக்கு திடீரென 80 கோடி லாபம் எப்படி கிடைத்தது ?  ராகுல் காந்தி  சரமாரி கேள்வி ? 

சுருக்கம்

Jai sha get more money from demonitisation...ragul blame

பணமதிப்பு  மதிப்பிழப்பு    நடவடிக்கையால் அமித் ஷா மகன்  ஜெய் ஷா   பயன் பெற்றார் என்றும்,  தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த  அவரின் கம்பெனி கடந்த ஆண்டில் மட்டும் திடீரென  80 கோடி ரூபாய்   லாபம் ஈட்டியது எப்படி என  காங்கிரஸ் துணைத் தலைவர்   ராகுல் காந்தி  கேள்வி எழுப்பியுள்ளார்.

ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8–ந் தேதி அதிரடியாக அறிவித்து, பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்தது இன்று வரை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில்  செய்தி  ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஒரே ஒருவர் மட்டும் பயன் அடைந்துள்ளார் என்பதை கடைசியாக கண்டு விட்டோம்  என்றும்,  அவர் ‘ஷா இன் ஷா ஆப் டெமோ’ ஜெய் அமித்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டில் பலன் அடைந்த ஒரே நபர், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் என்று கூறி, அது தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ள ‘தி வயர்’ இணையதளத்தின் ‘லிங்க்கை   இணைத்துள்ளார்.

அதில், ஜெய் அமித்தின் டெம்பிள் என்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் 2012–2013, 2013–2014 நிதி ஆண்டுகளின் நிறைவில் முறையே ரூ.6,230 மற்றும் ரூ.1,724 நஷ்டத்தை சந்தித்து உள்ளது.

2014–15 நிதி ஆண்டில்தான் ரூ.18,728 லாபம்      கிடைத்ள்ளதுள்ளது.  ஆனால், 2015–16 நிதி ஆண்டில் அந்த நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.80½ கோடியாக தடாலடியாக உயர்ந்துள்ளது. இதில், டெல்லி மேல்–சபை எம்.பி., ஒருவரது உறவினரின் நிதி நிறுவனம், ஜெய் அமித் நிறுவனத்துக்கு ரூ.15 கோடியே 78 லட்சம் கடன் வழங்கியதும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

அமித்ஷா மகன் மீது சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டு  இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..