மக்களவை தேர்தலில் மகா சக்தி கூட்டணி... ரஜினிக்காக நடிகர் விவேக் வக்காலத்து..!

By Thiraviaraj RMFirst Published Mar 6, 2019, 9:02 AM IST
Highlights

’அரசியலில் ரஜினி பின்வாங்கவில்லை. எத்தனை மெகா கூட்டணி அமைந்தாலும் மகா சக்தி என்கிற பொதுமக்கள் முன் தான் கூட்டணி வைத்துள்ளனர்’ என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். 
 

’அரசியலில் ரஜினி பின்வாங்கவில்லை. எத்தனை மெகா கூட்டணி அமைந்தாலும் மகா சக்தி என்கிற பொதுமக்கள் முன் தான் கூட்டணி வைத்துள்ளனர்’ என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். 

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி குறுமலை பகுதியில் பதினெட்டாம்படி கருப்பு புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டபத்தை நடிகர் விவேக் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவேக், ’'குறுமலை பகுதியில் உள்ள  பதினெட்டுபட்டிக் கருப்புசாமியும் அலங்காரித் தாயாரும் என் முன்னோர் வழிபட்ட தெய்வம்.

இவர்கள் என் குல தெய்வம். பல ஆண்டுகளுக்கு முன், மரங்கள் நடுவதற்காக நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். அப்போது நிறைய மரங்கள் நட்டோம். முன்பு இவ்வளவு மரங்கள் இருக்காது. அப்போது ஊர்மக்கள் இங்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பத்து ஆண்டுகளுக்கு முன், பக்தர்கள் நிழலில் தங்குவதற்கு சிறிய அறை ஒன்று கட்டிக் கொடுத்தேன்.

 

மண்டபம் கட்டித் தர வேண்டும் எனக் கேட்டார்கள். அதை எல்லோரும் சேர்ந்து செய்யலாமே என சொன்னேன். அதன்படி ஊர்மக்கள், பெரிய மனிதர்களுடன், நானும் சேர்ந்து கருப்பருக்கு பெரிய மண்டபமும், அலங்காரிஸ்வரி தாயாருக்கு, ஒரு மண்டபமும் கட்டியிருக்கிறோம்.இதில் ஊர்மக்கள் எல்லோருடைய உழைப்பும் இருக்கிறது. என் மேல் உள்ள பிரியத்தால் என்னை ரிப்பன் வெட்டிமண்டபத்தை திறக்க கேட்டுக்கொண்டார்கள். எத்தனை மெகா கூட்டணி அமைந்தாலும் அனைவரும் பொதுமக்கள் என்ற மகா சக்தி முன்புதான் கூட்டணி வைத்துள்ளனர். பொதுமக்கள் என்கிற சக்தி தீர்மானிப்பவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கூட்டணி வைக்கலாம் முடிவு மக்கள் கையில்தான் இருக்கிறது.

ரஜினி பின் வாங்க வில்லை அவர் முதலில் இருந்தே சட்டமன்ற தேர்தலில் தான் நிற்க போகிறேன் என சொன்னார் அதில் தெளிவாக இருக்கிறார். தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை. இதுவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. எல்லோரையும் போல நானும் மக்கள் முடிவை எதிர்பார்க்கிறேன்' என அவர் கூறினார்.

click me!