பிரதமர் நரேந்திர மோடி, பழக்க தோஷத்தால், திரும்ப, திரும்ப் பொய் சொல்றாரு…. ராகுல் அதிரடி குற்றச்சாட்டு…

Published : Mar 06, 2019, 07:38 AM IST
பிரதமர்  நரேந்திர மோடி, பழக்க தோஷத்தால், திரும்ப, திரும்ப் பொய் சொல்றாரு…. ராகுல் அதிரடி குற்றச்சாட்டு…

சுருக்கம்

உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் பல ஆணடுகளாக சிறு வகை ஆயுதங்கள் அரசால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும். ஆனால் தற்போது தான் புதிய தெரிழிற்சாலை தொடங்கியது போல மோடி பேசி வருவதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் ராகுல் காந்தி, பிரதமர் பழக்கதோஷத்தில் பொய் சொல்வதாக கிண்டல் செய்தார்.

உத்தர பிரதேச மாநிலத்தில், ராகுலின் சொந்த தொகுதியான அமேதியில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'ஏகே - 203' வகை துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர் , அமேதி நகரம், இனி, ஏகே - 203 கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளின் அடையாளமாக திகழும். இந்த துப்பாக்கிகள், அமேதியில் தயாரிக்கப்பட்டவை என, அறியப்படும்' என, பேசினார்.

அமலும் ராகுல் பெயர் குறிப்பிடாமல், பல முறை, மோடி, தாக்கி பேசினார். 'சிலர், எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் நிறைவேற்றாமல், வெற்று உரைகளை அளித்து வருகின்றனர்' எனவும் மோடி கூறினார்

இந்நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ,  அமேதியில், ஆயுதங்கள் தயாரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல்லை, 2010ல், நான் நாட்டினேன். பல ஆண்டுகளாக, அங்கு, சிறு வகை ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு சென்ற மோடி, பழக்க தோஷத்தில், மீண்டும் பொய்களை வாரி இறைத்துள்ளார். இதற்கு வெட்கப்பட வேண்டும் என கிண்டல் செய்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

டெப்பாசிட் வாங்குவாரா? சுந்தர் சி-யை டம்மியாக்கிய PTR பழனிவேல் தியாகராஜன்!
Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!