அப்துல் கலாம் இருக்கும் இடத்தை நோக்கி புறப்பட்டார் விவேக்... மரக்கன்றுகள் புடைசூழ இறுதி ஊர்வலம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 17, 2021, 5:05 PM IST
Highlights

விவேக் முழு உருவப்படம் முன்னாள் இருக்க, வானத்தில் மேகமூட்டங்களுக்கு இடையே ஒரு கல்லில் அப்துல் கலாமுடன் விவேக் பேசிக்கொண்டிருப்பதாக ஓவியம் வரையப்பட்டுள்ளது. 

சுவாமி விவேகானந்தர் மீதும் அப்துல் கலாம் மீதும் கொண்ட ஈர்ப்பால் மரம் நடுதலில் தனி சாதனை படைத்த முன் உதாரணமான சினிமா நடிகர் விவேக் மரணமடைந்தார். அவரது உடல் தகனம் செய்வதற்காக மக்கள் அலை நடுவே ஊர்ந்து செல்கிறது. 

லட்சக் கணக்கில் மரத்தை நட்ட இந்த மாபெரும் ஆலமரம், இன்று வேரோடு சாய்ந்து விட்டது. விவேக் இம்மண்ணை விட்டு மறைந்தாலும், அவர் நட்ட மரங்கள் என்றும் வேரூன்றி நிற்குமென அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தமிழ் திரையுலகிலும் அவரது மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என திரையுலகினர் பலர் கண்ணீர் சிந்துகிறார்கள். திரையுலகில் அவர் படைத்த சாதனைகளுக்காகவும் சமூகத்தின் மீது அவர் காட்டிய அக்கறையை போற்றும் விதமாகவும் காவல்துறை மரியாதையுடன் அவரது உடலை தகனம் செய்ய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிலையில் பல்வேறு ஓவியங்களை வரைந்து விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதில் ஒரு ஓவியத்தில் மரங்களுக்கு இடையே விவேக்கின் உருவம் வரையப்பட்டுள்ளது. 

விவேக் முழு உருவப்படம் முன்னாள் இருக்க, வானத்தில் மேகமூட்டங்களுக்கு இடையே ஒரு கல்லில் அப்துல் கலாமுடன் விவேக் பேசிக்கொண்டிருப்பதாக ஓவியம் வரையப்பட்டுள்ளது. 

click me!