கொரோனா காலத்தில் வாரி வழங்கிய நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா... ஷாக்காகிப்போன ரசிகர்கள்..!

Published : Apr 17, 2021, 03:42 PM IST
கொரோனா காலத்தில் வாரி வழங்கிய நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா... ஷாக்காகிப்போன ரசிகர்கள்..!

சுருக்கம்

வணக்கம் நண்பர்களே, எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.  

கடந்த வருடம் கொரோனா நெருக்கடி காரணமாக பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். அத்தகைய தொழிலாளர்களுக்காகத் தனியாக வேலைவாய்ப்புத் தளம் ஒன்றையும் ஆரம்பித்தார். இவற்றோடு கல்வி உதவித்தொகை, ஸ்மார்ட்போன்கள், மொபைல் டவர் அமைப்பு என கடந்த வருடத்திலிருந்து இன்றைய தேதி வரை எண்ணற்ற உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்

.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாகத் தொற்று எண்ணிக்கை இந்தியா முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் சோனு சூட் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், வணக்கம் நண்பர்களே, எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

எனவே என்னை நான் தனிமைப்படுத்தி கொண்டேன். கவலைப்பட ஒன்றிமில்லை, மாறாக முன்பை விட உங்கள் சிரமங்களை சரி செய்ய இப்போது எனக்கு அதிகம் நேரம் கிடைத்துள்ளது. நினைவில் கொள்ளுங்கள், எந்த பிரச்சனையும். நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன் என்றுள்ளார். நடிகர் சோனு சூட் கொரோனா மற்றும் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பல புலம்பெயர்ந்த தொழிலாளரகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலருக்கு உதவி செய்து அனைவரது மனங்களிலும் நீங்கா இடம்பிடித்துள்ளார். இதனால் படங்களில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் நீங்கள் ரியல் ஹீரோ என ரசிகர்கள் பலர் அவரை அழைத்து வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!