விவேக் ஹார்ட் அட்டாக்குல செத்துட்டானா..? துக்கம் தொண்டையை அடைக்குதே... கதறி கதறி அழும் வடிவேலு..!

Published : Apr 17, 2021, 01:25 PM IST
விவேக் ஹார்ட் அட்டாக்குல செத்துட்டானா..? துக்கம் தொண்டையை அடைக்குதே... கதறி கதறி அழும் வடிவேலு..!

சுருக்கம்

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நண்பனின் மரணம் குறித்து அறிந்த வடிவேல் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். 

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நண்பனின் மரணம் குறித்து அறிந்த வடிவேல் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

அதில்’’இன்னைக்கு காலையில என் நண்பன் விவேக் ஹார்ட் அட்டாக்குல செத்துட்டதா வந்த செய்திய கேட்டு ரொம்ப அதிர்ச்சியாயிட்டேன். அவனும் நானும் நிறைய படங்களில் இணைஞ்சு பணியாற்றியிருக்கிறோம். அவனைப்பத்தி பேசும்போது துக்கம் தொண்டையை அடைக்குது. ரொம்ப நல்லவன். பொதுநலச் சிந்தனை அதிகமாக இருக்கும் அவனுக்கு. அப்துல் கலாம் அய்யாவுடன் ரொம்ப நெருக்கமாக இருப்பான். அதேபோல விழிப்புணர்வு பிரச்சாரம், மரத்தை நடுவது என இப்படி எவ்வளவோ விஷயம் பண்ணுவான். 

ரொம்ப உரிமையா நானும் அவனும், என்னடா வடிவேலு, என்னடா விவேக்குனு பேசிக்கொள்வோம். அவனை மாதிரி வெளிப்படையா பேசுற ஆளே கிடையாது. எத்தனையோ கோடிக்கணக்கான ரசிகர்களில் எனக்கு அவனும் ஒரு ரசிகன். நான் அவனுக்கு ரசிகன். அவன் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் மனசுல பதியுற மாதிரியே இருக்கும். 

என்னைவிட எதார்த்தமா எளிமையாக பேசுவான். அவனுக்கு இப்படியொரு மரணம் வந்தது ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால முடியல. இந்த நேரத்துல நான் என்ன பேசுறதுனே தெரியல. அவனை நேரில் வந்து அஞ்சலி செலுத்த என்னால முடியல. ஏன்னா நான் இங்கே மதுரையில என்னோட அம்மாவோட இருக்கேன். என்னோட நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவிச்சுக்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். 


 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!