கர்நாடகாவை கதிகலங்க வைக்கும் கொரோனா... எடியூரப்பா.. டி.கே,குமாரசாமிக்கு இரண்டாவது முறை தொற்று..!

By Thiraviaraj RMFirst Published Apr 17, 2021, 12:45 PM IST
Highlights

கர்நாடகாவில் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர், முன்னாள் முதல்வர் என அரசியல்வாதிகள் பலரையும் ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா தொற்று.
 

கர்நாடகாவில் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர், முன்னாள் முதல்வர் என அரசியல்வாதிகள் பலரையும் ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா தொற்று. கடந்த ஆண்டு ஆகஸ்டில் 78 வயதான கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் கொரோனா வைரஸ் நிலைமை குறித்த அவசரக் கூட்டத்திற்கு எடியூரப்பா தலைமை தாங்கி அமைச்சர்களுடன் கலந்தலோசித்தார் . கூட்டம் முடிந்த சில மணி நேரங்களில் காய்ச்சல் காரணமாக இன்று காலை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடியூரப்பா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது

.

கர்நாடக முதல்வர் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிட் -19 க்கு பரிசோதிக்கப்பட்டார் ,அப்போது நோய்த்தொற்று எதிர்மறையாக இருப்பது கண்டறியப்பட்டது. இன்று அவர் இன்று மீண்டும் சோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளது

.

இதையடுத்து, பெங்களூருவில் தான் அனுமதிக்கப்பட்ட ராமையா மெமோரியல் மருத்துவமனையில் இருந்து மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் .எடியூரப்பா ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதே போல் இரண்டாவது முறையாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரும் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றுக்கு ஆளகி இருக்கிறார். முன்னாள் முதவர் ஹச்.டி.குமாரசாமியும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

click me!