தாங்கிக்க முடியலண்ணே... விவேக் மரணத்தால் கதறும் உதயநிதி ஸ்டாலின்..!

Published : Apr 17, 2021, 11:25 AM IST
தாங்கிக்க முடியலண்ணே... விவேக் மரணத்தால் கதறும் உதயநிதி ஸ்டாலின்..!

சுருக்கம்

தன் வாழ்நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்களையும், உற்சாகத்தையும் விதைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அண்ணனின் இழப்பை குடும்பத்தார் எப்படி தாங்கிக்கொள்வர்? 

மிகச்சிறந்த மனிதர் பண்பாளர் சமூக அக்கறை கொண்ட சீர்திருத்தவாதி பொதுவுடமை எண்ணம் கொண்டவர் சனாதனத்தை எதிர்த்து நயம்பட திறம்பட இந்த மக்களுக்கு புரிய வைத்த மாபெரும் கலைஞன் அப்துல்கலாமின் மறுஉருவம் விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்ததற்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ட்விட்டரில் அஞ்சலி செலுத்திய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘’அண்ணன் விவேக் அவர்களின் மரணம் தாங்கிக்கொள்ள முடியாத பேரதிர்ச்சி. கலைஞரின் அன்பை பெற்றவர். தலைவர் அவர்களின் நண்பர். 'மனிதன்' படத்தில் என்னுடன் நடித்தார்.

தன் வாழ்நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்களையும், உற்சாகத்தையும் விதைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அண்ணனின் இழப்பை குடும்பத்தார் எப்படி தாங்கிக்கொள்வர்? ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பம்-நண்பர்கள்- ரசிகர்களுக்கு என் ஆறுதல். சின்னக்கலைவாணர் விட்டு சென்ற சமூக பணிகளை நாம் தொடருவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!