தலைவரின் தொண்டனாக ரோட்டில் இறங்கி பிரசாரம் செய்வேன்... விஷால் அதிரடி!

First Published Jan 4, 2018, 7:28 PM IST
Highlights
vishal about rajinikanth political entry


சூப்பர்ஸ்டாருக்கு ஆதரவாக ரோட்டில் இறங்கி பிரசாரம் செய்வேன் என நடிகர் விஷால்  அதிரடியாக தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் பலரும் தற்போது ரஜினியின் வீட்டருகே தவமிருக்கின்றார்கள். ஊடகத்தினர் உள்பட. அந்தளவுக்கு ரஜினி தனதுஅரசியல் நிலைப்பாடு பற்றி அறிவித்ததிலிருந்து  ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு குறைவில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு எதிர்ப்புகள் பல வந்தாலும் அசராமல் பல அதிரடி  முடிவுகளை  எடுத்து வருகிறார்.

31ஆம்தேதி அரசியல் அறிவிப்பு, புத்தாண்டில் ரஜினி மன்ற இணையதளம் மற்றும் செயலி  அறிவிப்பு, நேற்று கருணாநிதியுடன் சந்திப்பு, இன்று ஆர்.எம். வீரப்பனிடம் ஆசி பெற்றது என தமிழக அரசியல் களத்தை பரபரப்பாகவே வைத்திருக்கிறார்.

இந்நிலையில் ஏற்கெனவே நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என  இரண்டு பதவிகளை வகித்து வந்த விஷால், அரசியலிலும் களம் காண ஆர்கே.நகர் தேர்தலில் நிற்கிறேன் என பரபரப்பை ஏற்படுத்தினார் .

ஆனால் இவர் தன்னுடைய சொத்து விவரத்தை சரியாக குறிப்பிடாத காரணத்தால் தேர்தல் அதிகாரி இவருடைய மனுவை நிராகரித்தார். எனினும், சுயேச்சையாக ஆர்.கே.நகரில் நிற்கும் வேட்பாளருக்கு உதவுவேன் என கூறி அதோடு ஆளே காணாமல்  போனார்.

ரஜினிக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார். இதுபற்றி செய்தியாளர்களிடம்  பேசிய விஷால் அரசியல் என்பதும் சமூக சேவை தான் எனக் கூறினார். தலைவர் அரசியலில் இறங்கி விட்டார் என்றும், தான் அவருக்கு தொண்டனாக ரோட்டில் இறங்கி  அனைத்து தொகுதியிலும் பிரச்சாரம் செய்வேன் என்றும் அதிரடியாகக் கூறினார்.

click me!