50 லட்சம் தொண்டர்கள் என சொன்னதெல்லாம் அண்டப் புளுகு! இதோ முழு விவரம்....

 
Published : Jan 04, 2018, 06:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
50 லட்சம் தொண்டர்கள் என சொன்னதெல்லாம் அண்டப் புளுகு! இதோ முழு விவரம்....

சுருக்கம்

Rajinis new website www.rajinimandram.org has lot of important things

ரஜினி தனது அரசியல் செயல்பாடுகளுக்காக புதிய இணையதளம் தொடங்கி இருக்கிறார். அதேபோல் ரஜினி மன்றம் என்ற பெயரில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். இதில் அவரது ரசிகர்கள் தங்களது பெயரை பதிவு செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு நாட்டில் இருக்கும் அவரது தீவிர தொண்டர்களும் இந்த இணையத்தில் தங்களை இணைத்து உள்ளனர். இந்த வெப்சைட் பதிவு மற்றும் மொபைல் ஆப் டவுன்லோடு குறித்து சில உண்மைகளும், அதை எவ்வளவு பேர்  பார்க்கிறார்கள் என்ற தகவலும் வெளியே வந்து இருக்கிறது. ரஜினியின் 'www.rajinimandram.org' என்ற வெப்சைட் தற்போது இந்தியா முழுக்க வைரலாகிறது.

ரஜினி ரசிகர்களின் கணக்கு படி இதுவரை அந்த இணையதளம் மற்றும் அப்ளிகேஷன் மூலமாக 50 லட்சம் பேர் அவர் மன்றத்தில் இணைந்து இருக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு கணக்கு பண்ணினால் 15 லட்சம் பேர் சென்று அந்த இணையதளத்தை பார்த்துள்ளனர், 4 நாள் கணக்கு படி பார்த்தால் ஒருநாளைக்கு குறைந்தது 15 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே சராசரியாக ஒருநாளைக்கு 10 லட்சம் பேர் தங்களை மன்றத்தில் இணைத்தார்கள் என்று கூறமுடியும்.

ரஜினி மன்றம் அப்ளிகேஷன் மூலமாகவும் இதுவரை ஒரு லட்சம் பேர் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டதாக கூறப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டையும் சேர்த்துதான் 50 லட்சம் என்ற கணக்கு வந்து இருக்கிறது. ஆனால் முதலில் டெக்னிக்கல் பிரச்சனையால் இந்த அப்ளிகேஷன் சரியாக வேலை என்று கூறப்பட்டது பின் பலர் அதை டவுன்லோட் செய்ததாக குறிப்பிட்டு இருக்கின்றனர்.

மொதமாக அப்ளிகேஷனை டவுண் லோட் எவ்வளவு என நேற்று இரவு கணக்குப்படி மொத்தமே ஒரு லட்சம் பேர் மட்டுமே செய்து உள்ளனர். மேலும் கூகுள் டிராபிக் மற்றும் அமேசான் டிராபிக் படி ரஜினியின் இணையதளம் இந்திய அளவில் 4,648வது இடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 5 லட்சத்திற்கும் குறைவான பார்வையாளர்கள் இருந்தால் மட்டுமே இவ்வளவு இருக்க முடியும்.

எனவே ஒருநாளைக்கு மூன்றரை லட்சம் பேர் தங்களை பதிவு செய்தார்கள் என்று வைத்தால் கூட மொத்தமாக 50 லட்சம் பேர் பதிவு செய்திருக்க வாய்ப்பில்லை. மொத்தமாக பதிவு செய்தவர்கள் கணக்கு போட்டு பார்த்தால் 10 முதல் 15 லட்சம் கூட இருக்க வாய்ப்பில்லை. எப்படி கூட்டி கழித்து குட்டி கரணம் போட்டாலும் அவங்க சொன்ன அந்த ஐம்பது லட்சம் என்பது அண்டப்புளுகு என சமூக வலைதளங்களில் வைரளாகி வருகின்றது.

PREV
click me!

Recommended Stories

ஓட்டுக்காக மாணவர்களுக்கு லேப்டாப்..! முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!
லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!