2ஜி வழக்கு குறித்து ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் கடிதம்...!

 
Published : Jan 04, 2018, 05:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
2ஜி வழக்கு குறித்து ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் கடிதம்...!

சுருக்கம்

In the case of the 2G case the truth is the release of the truth

2 ஜி வழக்கில் உண்மை வென்றதாகவும் வழக்கில் இருந்து விடுதலையானது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆ.ராசாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மேலும் 2ஜி வழக்கால் ஆ.ராசாவும் அவரது குடும்பத்தினரும் மிகவும் இன்னலுக்கு ஆளாகினர் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதனால் மத்திய அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும்  அப்போதைய மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட 14 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில் குற்றத்தை சிபிஐ நிரூபிக்கவில்லை என கூறி ஆ.ராசா உள்ளிட்டோரை சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

அப்போது தொண்டர்களிடம் பேசிய ஆ.ராசா, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விபரம் புரியாமல் இருந்ததற்கான பலனை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுபவித்ததாகவும்,  அலைக்கற்றை ஏலம் என்றால் என்னவென்று தெரியாத மன்மோகன் சிங், தன்னை கைது செய்தால், எல்லாம் சரியாகிவிடும் என நினைத்ததாகவும்  ஆ.ராசா குற்றம்சாட்டியிருந்தார். 

இந்நிலையில் 2 ஜி வழக்கில் உண்மை வென்றதாகவும் வழக்கில் இருந்து விடுதலையானது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆ.ராசாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மேலும் 2ஜி வழக்கால் ஆ.ராசாவும் அவரது குடும்பத்தினரும் மிகவும் இன்னலுக்கு ஆளாகினர் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!