
ரஜினி தனது ரசிகர்களின் பல நாள் கோரிக்கையான அரசியல் அறிவிப்பை கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டுவிட்டார். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தொகுதிகளிலும் 2021ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார். சுமார் 30 ஆண்டுகளாக அதோ இதோ என அதிரி புதிரி விளாயாட்டு காட்டிவந்த ரஜினி டிசம்பர் 31-ம் தேதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ரஜினி ரசிகர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியில் உள்ளனர்.
ரஜினிமன்றத்தில் இதுவரை 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.சில தினங்களுக்கு முன்பாக தனது அரசியல் வருகையை உறுதி செய்த ரஜினிகாந்த் தனது மன்றத்தில் இணையுமாறு ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு வேண்டுகோள்விடுத்தார்.செல்போனில் பிளே ஸ்டோரில் இருந்து ரஜினி ஆப்பை பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் பலர் உறுப்பினர்களாக இணைந்து வருவதாக கூறப்படுகிறது.
‘‘ரஜினி பெயரில் தமிழகம் முழுக்கப் பதிவு செய்யப்பட்ட 22 ஆயிரம் மன்றங்கள், பதிவு செய்யப்படாத 30 ஆயிரம் மன்றங்கள் செயல்படுகின்றன. 1998-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய மன்றங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. தற்போது, முழுமையான கட்டமைப்பு இல்லாமல் தள்ளாடுகிறது ரஜினி மன்றம். அதனால்தான் இந்த அறிவிப்பு.
ஆனால், ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு, புதிய பிரமுகர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. புதிய பிரமுகர்கள்னா யாருங்கோ என கேட்காதீங்க கோடி கோடியாய் கொட்டி தர காத்திருக்கும் இந்தியாவின் முக்கிய வியாபார புள்ளிகளும், சினிமா வில் இருக்கும் சில நண்பர்களும், திமுக, அதிமுக மற்றும் பலகாட்சிகளில் கழுத்தைபிடித்து வெளியில் தள்ளப்பட்ட பல மாஜி அமைச்சர்கள், முன்னணி மாவட்ட நிர்வாகிகள் என ரஜினிக்காக காத்திருக்கிறார்கள்.
இப்படி பலரின் வருகையால் ‘எங்கே பழையவர்களை ரஜினி புறக்கணித்து விடுவாரோ’ என்பதால் பலர் சொக்கத்தில் உள்ளார்களாம். தலைவர் அரசியல் கட்சி தொடங்குவாறு நம்மளும் நம்ம ஊருல பெரிய ஆளுன்ற பந்தவோட சுத்திக்கொண்டிருந்த சில மன்றத்தினர் ஏகத்துக்கும் கடுப்பில் இருக்கிறார்களாம்.