விராலிமலையில் இருந்து அதிமுக முக்கிய பிரமுகர் நீக்கம்... சாட்டையை சுழற்றும் ஓபிஎஸ், இபிஎஸ்..!

Published : Aug 15, 2021, 12:09 PM ISTUpdated : Aug 18, 2021, 09:49 AM IST
விராலிமலையில் இருந்து அதிமுக முக்கிய பிரமுகர் நீக்கம்... சாட்டையை சுழற்றும் ஓபிஎஸ், இபிஎஸ்..!

சுருக்கம்

அதிமுகவின் கொள்ளை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட நிர்வாகி அக்கட்சியில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் கொள்ளை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட நிர்வாகி அக்கட்சியில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கழகத்தின் கொள்ளை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஜேகராஜ் (விராலிமலை மேற்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலப்பிரிவுச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். 

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!