42 ஆயிரம் பேர் வாக்களிப்பு... 56+22 மார்க்... ஸ்டாலின் எக்ஸ்லெண்ட்..!

By vinoth kumarFirst Published Aug 15, 2021, 10:56 AM IST
Highlights

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 100 நாள்கள் ஆகின்றன. இந்த நூறு நாள்களில், மு.க.ஸ்டாலின் ஆட்சியை சிறப்பாக நடத்துகிறார் என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 100 நாள்கள் ஆகின்றன. இந்த நூறு நாள்களில், மு.க.ஸ்டாலின் ஆட்சியை சிறப்பாக நடத்துகிறார் என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மே மாதம் திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பாகவே, தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த திமுக அதை உற்சாகமாகக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. அறிவாலயத்தின் முன்பு கூடி பட்டாசு வெடித்த தொண்டர்களைக் கூட கலைந்து போகுமாறு கட்சி கேட்டுக் கொண்டது. வெற்றி ஊர்வலங்களும் இல்லை. பிரமாண்டமாகப் பதவியேற்பு விழாவை நடத்த நினைத்த ஸ்டாலின் உளிமையான முறையில் முதல்வராக பதவியேற்றக் கொண்டார். இதனையடுத்து, அவர் முதல்வராக பதவியேற்றது மே 4,000 ரூபாய் கொரோனா நிவாரணம், மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசம், ஆவின் பால் விலைக் குறைப்பு உள்ளிட்ட சலுகைகள் அறிவித்தார். இது பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதுபோல், கொரோனா 2வது அலை சிறப்பாக எதிர்கொண்டு மத்திய அரசால் பாராட்ட பெற்றது. 

மேலும், பெண் காவலர்களை சாலையோர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அதேபோல், கடும் வெயில் மற்றும் மழையை பொருட்படுத்தாமல் அரும்பாடு பற்று வரும் காவலருக்கு வாரந்தோறும் ஒரு நாள் விடுப்பு என திட்டத்தை கொண்டு வந்தார். மேலும், ரேஷன் கடைகளில் 14 மளிகை பொருட்களையும் இலவசமாக வழங்கினார். அதேபோல், நகர பேருந்துகளில் திருநங்கையர்களும் மாற்றுத் திறனாளிகளும் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், கோவில்களில் தமிழில் அர்ச்சனை திட்டத்தை தொடங்கி வைத்தார். 

குறிப்பாக மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் OBC மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனை நடைமுறையில் கொண்டு வருவதற்கு திமுகவின் பங்களிப்பு பெரியளவில் இருந்தது. மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரை விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றார். தமிழகத்தில் முதல் முறையாக இ பட்ஜெட்டை தாக்கல் செய்தது. முதல் முறையாக வேளாண்றைக்கு தனி பட்ஜெட் உள்ளிட்டவை 100 நாட்களில் மக்கள் விரும்பும் முதல்வராகவே ஸ்டாலின் இருந்து வருகிறார். 

இந்நிலையில், அரசியல் விமர்சகர் சுமந்த்.சி ராமன் அவரது டுவிட்டர் பக்கத்தில்;- ஸ்டாலினுடைய 100 நாள் ஆட்சியை பற்றி கருத்து கணிப்பு நடத்தினார். அதில், சிறப்பு (Excellent), நன்று (Good),சராசரி (Average),மோசம் (Poor) என்ற நான்கு பிரிவுகளின் கீழ் கருத்து கணிப்பை நடத்தினார். இதில், 42,000க்கும் மேற்பட்ட பங்கேற்ற இந்த கருத்து கணிப்பில்  56 சதவீத பெயர் சிறப்பு (Excellent)என்றும்,  22 சதவீத பெயர்  நன்று (Good) என்றும், 10.5 சதவீத பெயர் சராசரி (Average)என்றும், 12 சதவீத பெயர்  மோசம் (Poor) என்றும் கருத்து கணிப்பில் கூறியிருக்கிறார்கள். இதில், மு.க.ஸ்டாலினின் 100 ஆட்சியை பெரும்பாலானோர் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!