இன்னும் சிறிது காலத்தில் மிகப்பெரிய திட்டம் வரப்போகிறது... பிரதமர் மோடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Aug 15, 2021, 8:52 AM IST
Highlights

கடந்த 2 ஆண்டுகளில் 4.5 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் கூட டிஜிட்டல் இந்தியாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. நாட்டிலும், வெளியாட்டிலும் ஒரு மிகப்பெரிய சந்தையை உருவாக்க டிஜிட்டல் இந்தியா திட்டம் உதவும். 

கிராமங்களில் கூட டிஜிட்டல் இந்தியாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. நாட்டிலும், வெளியாட்டிலும் ஒரு மிகப்பெரிய சந்தையை உருவாக்க டிஜிட்டல் இந்தியா திட்டம் உதவும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

75வது ஆண்டு சுதந்திர தின நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். உரையை தொடங்கிய பிரதமர் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு கைத்தட்டி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து விழாவில் பங்கறே்றவர்களும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் கொரோனா போராளிகள், தடுப்பூசி தயாரித்தவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இதனையடுத்து, பேசிய அவர்;- உள்ளகட்டமைப்பில் எந்த நாட்டை விடவும் குறைவானவர்கள் இல்லை என்பதை நிரூபித்து காட்ட வேண்டும். நமது லட்சியங்களை அடைய கடினமான உழைப்பை செலுத்த வேண்டும். ஒரு வினாடியை கூட வீணடிக்காமல் உழைக்க தொடங்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் நாம் இலக்கை அடைய ஒரு வினாடியை கூட வீணாக்க கூடாது. வளர்ச்சி பாதையில் நம் நாடு மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது. மருத்துவ வசதி உள்ளிட்ட திட்டங்கள் மக்களை வேகமாக சென்றடைய வேண்டும்  என பிரதமர் கூறியுள்ளார். 

உஜ்வாலா ஆயுஷ்மன் பாரத் திட்டம் வரை பல்வேறு திட்டங்கள் ஏழைகளுக்கு உதவியாக இருக்கின்றன. நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. கோடிக்கணக்கான வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு சாலை வசதி, காப்பீடு உள்ளிட்ட வசதிகள் 100 சதவீதம்  கிடைக்க வேண்டும். ஏழைகளுக்கு 100 சதவீதம் வீட்டு வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் தரமான மருத்துவ வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் சாலைகள், அனைவருக்கும் வங்கிக்கணக்கு என்பதே நமது நோக்கம் என்றார். அரசின் திட்டங்கள் ஒரு சிலரை அடையாமல் போகும் அவல நலை தற்போது இல்லை. 

இந்தியாவில் ஒரு பகுதி கூட பின்தங்கிய பகுதியாக இருக்க கூடாது என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறோம். 110 பின்தங்கிய மாவட்டங்களில் வளர்ச்சிப்பணிக்கு தனிகவனம் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஏழைகளுக்கும் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 4.5 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் கூட டிஜிட்டல் இந்தியாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. நாட்டிலும், வெளியாட்டிலும் ஒரு மிகப்பெரிய சந்தையை உருவாக்க டிஜிட்டல் இந்தியா திட்டம் உதவும். 

ஜம்மு காஷ்மீரில் தொகுதி வரையறை குழு அமைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். லடாக்கில் உயர் கல்விக்காக சிந்து பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் தொகுதி வரையை குழு அமைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.  இன்னும் சிறிது காலத்தில் மிகப்பெரிய திட்டம் ஒன்றை நாட்டுக்கு கொண்டு வர இருக்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக உள்ள தடைக்கற்களை தாண்டி செல்லும் வகையில் புதிய திட்டம் இருக்கும். நம்முடைய தொழில்துறை உலக அளவில் போட்டியிட இந்த திட்டம் உதவு செய்யும். கதி சக்தி என்ற இந்த வேகமான திட்டம் நாட்டின் வளர்ச்சியை வேகமடைய செய்யும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

click me!