கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகத்திலேயே இந்தியா தான் முதலிடம்.. சுதந்திர தினவிழாவில் மார்தட்டும் பிரதமர்.!

By vinoth kumarFirst Published Aug 15, 2021, 8:09 AM IST
Highlights

உலகின் முன்னணி நாடுகளில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்க தொடங்கியதோ அப்போதே இந்தியாவிலும் கிடைத்தது. போலியோ தடுப்பூசியை பெறுவதற்கு நமக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது.

நாட்டிற்கு பெருமை தேடி தந்த விளையாட்டு வீரர்களுக்கு கைகளை தட்டி உற்சாகம் ஏற்படுத்துவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

75 வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியடிக்கொடி ஏற்றி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.  அவர் பேசுகையில்;- சுதந்திரத்தை  பெற்று தந்த போராட்டத் தியாகிகள் அனைவரையும் இத்தருணத்தில் நினைவுகூர்கிறேன். கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பூசி தயாரித்தவர்கள் அனைவரும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். 

மேலும், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்களை கை கைத்தட்டி பிரதமர் பாராட்டினார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகள் சுதந்திர தினவிழாவில் பங்கேற்றது பெருமை அளிக்கிறது. ஒலிம்பிக் தடகளத்தில் புதிய வரலாற்றை படைத்தது மிகப்பெரிய விசயம்.  வருங்கால தலைமுறையினருக்கு உற்சாகம், விழிப்புணர்வை விளையாட்டு வீரர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆகஸ்ட் 14ல் நாடு பிரிவனை அடைந்தபோது மக்கள் கடும் துயரை அனுபவித்தனர். சுதந்திரம் பெற்றபோது நாடு பிரிவினை அடைந்த வேதனையை இன்னமும் உணர்கிறேன். 

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் அனைவரும் சிறப்பாக பங்களிப்பை வழங்கினர். கொரோனா மனித குலத்திற்கு மிகப்பெரும் சவாலாக மாறியது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகத்திலேயே நம் நாடுதான் முதலிடத்தில் உள்ளது பெருமிதம். கொரோனா தடுப்பூசியை இந்தியாவிலேயே உருவாக்கியதால்தான் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கிறது. 

உலகின் முன்னணி நாடுகளில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்க தொடங்கியதோ அப்போதே இந்தியாவிலும் கிடைத்தது. போலியோ தடுப்பூசியை பெறுவதற்கு நமக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால், கொரோனா தடுப்பூசி அப்படியல்ல. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது கட்டமைப்பு குறைவாக இருந்தாலும், நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

click me!