அடித்து தூக்கிய அதிமுக... பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போன திமுக... இடைத்தேர்தல் விறுவிறுப்பு..!

By vinoth kumarFirst Published Oct 24, 2019, 10:12 AM IST
Highlights

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொகுதியில் 4-வது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் முத்தமிழ்செல்வன் முன்னிலை பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொகுதியில் 4-வது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் முத்தமிழ்செல்வன் முன்னிலை பெற்றுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க.வை சேர்ந்த ராதாமணி உடல்நலகுறைவால் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, காலியானதாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் 21-ம் தேதி நடைபெற்றது. இந்த தொகுதியில் முத்தமிழ்செல்வன் (அ.தி.மு.க.) புகழேந்தி (தி.மு.க.), கந்தசாமி (நாம் தமிழர் கட்சி) மற்றும் 9 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 12 பேர் போட்டியிட்டனர். இத்தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 84.41 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், தற்போது விக்கிரவாண்டி தொகுதியில் 4-வது சுற்று முடிவில் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 27,319 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தி.மு.க வேட்பாளர் புகழேந்தி 16,961 வாக்குகள் பெற்று உள்ளார். அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 8000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். 

click me!