திமுக கூட்டணியிடமிருந்து 2 தொகுதிகளையும் அடித்துப் பிடுங்கியது அதிமுக !! அதிர்ச்சியில் ஸ்டாலின் !!

Published : Oct 24, 2019, 09:58 AM ISTUpdated : Oct 24, 2019, 12:02 PM IST
திமுக கூட்டணியிடமிருந்து 2 தொகுதிகளையும் அடித்துப் பிடுங்கியது அதிமுக !! அதிர்ச்சியில் ஸ்டாலின் !!

சுருக்கம்

திமுக கூட்டணியிடமிருந்து நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. இரண்டு தொகுதிகைளிலும் திமுக படுதோல்வியைத் தழுவி வருவதால் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த ஜுன் மாதம் மரணமடைந்தார். இதையடுத்து அங்கு 21  ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.

இதே போல் நாங்குநேரி தொகுதி  காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமா நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆகிவிட்டதால் அந்த தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு தொகுதிகளுமே திமுக கூட்டணி தொகுதிகள்.

ஆனால் நடைபெற்ற இடைத் தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளையுமே தற்போது ஸ்டாலின் இழக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி பிரமாண்டமான வெற்றி பெறறதால் எப்படியும் இந்த இடைத் தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என்றே ஸ்டாலின் நம்பினார்.

ஆனால் விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி தொகுதிகளில் அதிமுக அடிச்சுத் தூக்கி முன்னிலை பெற்று வருகிறது. இது திமுகவுக்கு பெரும் பின்னடைவத் தந்துள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

TVK Vijay : 100 கோடி சொத்தை மறைத்து முறைகேடு செய்த தவெக விஜய் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
TVK Vijay: கோயில், மசூதிக்கு போனதுல தப்பில்லையாம்.! சர்ச்சுக்கு போனது தப்பாம்.! இப்படி பண்றீங்களேப்பா.!