ஹரியாணாவில் திடீர் ட்விஸ்ட்... பாஜகவுக்கு ட்ஃப் பைட் கொடுக்கும் காங்கிரஸ்... மெஜாரிட்டியைப் பெறுவதில் பாஜகவுக்கு சிக்கல்!

By Asianet Tamil  |  First Published Oct 24, 2019, 9:57 AM IST

ஹரியாணாவில் மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். முன்னிலை நிலவரப்படி பாஜக அந்த எண்ணிக்கையைப் பெறுவதில் இழுபறியில் உள்ளது.


தொடக்கத்தில் ஹரியாணாவில் விறுவிறுவென முன்னிலை வகித்த பாஜக, தற்போது கொஞ்சம்கொஞ்சமாக பின்னடைவை பெற்று வருகிறது.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் ஹரியாணாவில் உள்ள 90 தொகுதிகளிலும் அக்டோபர் 21 அன்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. இங்கே பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இந்த இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகித்தது. 


ஹரியாணாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தொடக்கத்தில் 50 தொகுதிகள் வரை முன்னிலை பெற்றது. காங்கிரஸ் 15 முதல் 20 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்தது. ஆனால், காலை 9.45 நிலவரப்படி இந்த நிலை மாறிடிருக்கிறது. பாஜக 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் 31  தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. பிற கட்சிகள் 19 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
ஹரியாணாவில் மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். முன்னிலை நிலவரப்படி பாஜக அந்த எண்ணிக்கையைப் பெறுவதில் இழுபறியில் உள்ளது.

Tap to resize

Latest Videos

click me!