‘பிரச்சினைகள் உருவாக்கிய ஓ.பி.எஸ். ஒரு தீய சக்தி’ - நடிகை விஜயசாந்தி ‘பாய்ச்சல்’

 
Published : Feb 19, 2017, 06:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
‘பிரச்சினைகள் உருவாக்கிய ஓ.பி.எஸ். ஒரு தீய சக்தி’ - நடிகை விஜயசாந்தி ‘பாய்ச்சல்’

சுருக்கம்

தமிழகத்தில் பிரச்சினைகளை உருவாக்கி, நிலையற்ற ஆட்சிக்கு முயற்சித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு தீய சக்தி என்று நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான விஜயசாந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே அதிகாரப்போட்டி உருவானதில் இருந்து நடிகை விஜயசாந்தி டுவிட்டரில் சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக ஏற்பட்ட அரசியல் குழப்பத்துக்கு பின், சட்டப்பேரவையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு பெரும்பான்மையை நேற்று முன் தினம் நிரூபித்துள்ளது.

ஆனால், இதற்கு தி.மு.க., ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினர் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு நடிகை விஜயசாந்தி நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், “ தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக அரசியல் குழப்பத்தை உருவாக்கி, பிரச்சினைகளை ஏற்படுத்தி, நிலையற்ற அரசுக்கு முயற்சித்த ஓ.பன்னீர்செல்வம் அவரின் ஆதரவாளர்கள் ஒரு தீய சக்தி.

அவர்களை மீறி, நம்பிக்கை ஒட்டெடுப்பில் வெற்றி பெற்று புதிதாக முதல்வராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்துக்களை தெரிவிக்கிறேன்.

கட்சிக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் எந்தவிதமான சேதமும், பங்கமும் ஏற்படாமல் இருக்கும் சசிகலா ஒருபக்கம், மற்றொரு பக்கம் பிரச்சினைகளை உருவாக்கு தீய சக்தியான ஓ.பன்னீர் செல்வம் இருக்கிறார்கள்'' என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!