சோத்தை திங்குறியா...? இல்லை...? தொகுதிவாசிகளின் கேள்வியால் கதறும் கோவை எம்.எல்.ஏ.,

First Published Feb 19, 2017, 6:36 PM IST
Highlights


சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதையடுத்து எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யபட்டார். பின்னர், ஆதரவு எம்.எல்.ஏக்களின் கையொப்ப பட்டியலை கவர்னரிடம் எடப்பாடி அளித்ததால் அவரை பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

அதன்படி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றுகொண்டார்.  ஆனால் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் அவருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சிறப்பு சட்டபேரவை கூட்டம் நேற்று கூடியது. இதில் ரகசிய வாக்கெடுப்பு எடுக்ககோரி ஓ.பி.எஸ் தரப்பிலும் திமுக தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் திமுகவினர் சட்டசபையில் சபாநாயகரின் பேச்சை மீறி வன்முறையிலும் ஈடுபட்டனர். இதனால் திமுகவினரை சட்டசபையில் இருந்து வெளியேறுமாறு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

பின்னர், எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்.எல்.ஏக்களும் ஓ.பி.எஸ்க்கு 11 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இதனிடையே பொதுமக்களும் மாணவர்களும் இளைஞர்களும் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தருமாறு அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்களுக்கு செல்பேசி மூலம் தொடர்பு கொண்டு வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை நிலைநிறுத்தவே எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களித்ததாக கோவை உக்குடம் பகுதி தெற்கு தொகுதி எம்.எல்.ஏ  அம்மன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

கோவை உக்குடம் பகுதியில், அதிமுக தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனின் அலுவலகம் உள்ளது. அங்கு  இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அம்மன் அர்ஜுனன், பொதுமக்கள் என்ற பெயரில் திமுகவினர் தங்கள் குடும்பத்தை தொலைபேசி வாயிலாக மிரட்டி வருவதாகவும், அதில் ஒருவர் மிகவும் அசிங்கமாக தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினரை இப்படிதான் திட்டுவதா? ஓ.பி.எஸ்க்கு ஓட்டு போடுங்கள் என்று கூறிவிட்டு சோத்தை திங்குறியா வேற எதையாது திங்குறியா? என கேட்கிறார்கள்.

என் மனைவி, என் சகோதரி ஆகியோரை திட்டுகிறார்கள். இதுதான் நாகரீகமா? இதுதான் பண்பாடா என அன்ஜுனன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடிவேலு காமெடியில் வரும் “பிரபா ஒயின்ஷாப் ஓனரா? எப்ப கடையை திறப்பீங்க?” என்பது போல் இரவும் பகலும் எம்.எல்.ஏ அர்ஜுனனை கதற விட்டுறுகிறார்கள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை....

 

click me!