
எம்எல்ஏக்கள் சொந்த ஊர் திரும்ப ரொம்ப ரொம்ப தயக்கம்.....ஏன் ?
அதிமுக எம் எல் ஏக்கள் கடந்த 1௦ நாட்களாக ,கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியே சட்டபேரவையில் கலந்துக் கொண்டு , நேற்று வாக்கெடுப்பு நடத்தினர். சசிகலா ஆதரவான அதிமுக எம்எல்ஏக்கள், பெரும்பான்மையை நிரூபித்து, பழனிசாமியை மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுத்தனர்.
இந்நிலையில், பல எம்எல்ஏக்கள் இன்னும் கூவத்தூரிலே தங்கி இருப் பதாக செய்திகள் வெளியாகி உள்ளது .
இந்நிலையில், அந்தந்ததொகுதி அதிமுக எம்எல்ஏக்கள் அலுவலகத்தை, பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது,.
இந்நிலையில், இன்னும் எத்தனை எம்எல்ஏக்கள் , எத்தனை நாட்களுக்கு தங்க போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.