"இந்தியாவிலேயே மூத்த அரசியல்வாதி என்ற பெருமைக்குரியவர் கருணாநிதி" - விஜயகாந்த் புகழாரம்

Asianet News Tamil  
Published : Jun 02, 2017, 11:29 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
"இந்தியாவிலேயே மூத்த அரசியல்வாதி என்ற பெருமைக்குரியவர் கருணாநிதி" - விஜயகாந்த் புகழாரம்

சுருக்கம்

vijayakanth wishing karunanidhi for his birthday

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, கடந்த 1957-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் வென்று முதல்முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

அதன்பின்னர் அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். எனவே, கருணாநிதியின் 60 ஆண்டுகால சட்டப்பேரவை வைர விழாவையும்  அவரது 94-வது பிறந்த நாள் விழா என இரண்டு வழக்களையும் நாளை கொண்டாட திமுக ஏற்பாடுகளை செய்து வருகிறது.

கருணாநிதியின் வைரவிழாவில் ராகுல் காந்தி , நிதீஷ்குமார், லாலு பிரசாம் யாதவ் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

கருணாநிதிக்கு பல்வே மரசியல் கட்சத் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் வைரவிழா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் தனது வாழ்த்து செய்தியில், இந்தியாவிலேயே மிக மூத்த அரசியல் தலைவர் என்ற பெருமைக்குரியவர் திமுக தலைவர் கருணாநிதி என்றும் அவர்  நீண்ட ஆரோக்கியத்துடன் இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!