
அவனியாபுரத்தில் நடந்த போராட்டத்தில் இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.நேற்று பாலமேட்டில் போலீசார் முன் கூட்டியே குவிக்கப்பட்டு இளைஞர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். போலீசார் குவிக்கப்பட்டு போராட்டம் நடத்த முடியாத அளவுக்கு சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து இன்று அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பத்தாயிரக்கணக்கில் இளைஞர்கள் திரண்டனர்.
இதனால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வாடிவாசலுக்கு முன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர்.
இதனால் போலீசார் திடீரென தடியடி நடத்த துவங்கினர். மாவட்ட எஸ்பி விஜேந்திர பிடாரி தலைமையில் போலீசார் , அதிரடி போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதனால் இளைஞர்கள் சிதறி ஓடினர். பல இளைஞர்கள் தடியடியில் கடும் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் தடியடியை பல்வேறு கட்சித்தலைவர்கள் கண்டித்துள்ளனர். தேமுதிக தலவர் விஜயகாந்தும் கண்டித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தடியடி சூழ்நிலை உருவாகாமல் தடுக்க தவறிய தமிழக அரசின் செய்லபாடு ஏற்கத்தக்கதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் போலீசாரின் தடியடியில் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.