
அதிமுகவை காட்டிக் கொடுக்கும் பச்சை துரோகி கே.பிமுனுசாமி என அவர் சமூகத்தை சார்ந்த அமைச்சர் சி.வி சண்முகம் கடுமையாக சாடியுள்ளார்.
தஞ்சாவூரில் திவாகரன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கே.பி முனுசாமி பேசியதை தொடர்ந்து அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அமைச்சர் ஒ.எஸ்.மணியன்,காமராஜர் தொடர்ந்து தற்போது கே.பிமுனுசாமி சார்ந்த வன்னியர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர் சி.வி சண்முகம் கடுமையாக சாடியுள்ளார் .
கே.பி முனுசாமி தனது சொந்த மாவட்டத்தில் ஒரு எம்.பியை கூட வெற்றி பெற வைக்க முடியவில்லை, மேலும் தான் பேட்டி இடத்தில் மூன்றாம் இடத்தை மட்டுமே அவரால் பிடிக்க முடிந்தது. எனவே ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வக்கு இல்லாதால் உள் நோக்கத்திற்கும் அரசியல் ஆதாயத்திற்காகவும் தவறான தகவலை கூறி வருகிறார். தனது தவறை கே.பி முனுசாமி நிறுத்தி கொள்ள வேண்டுமென எச்சரிக்கை விடுத்தார்.
அமைச்சர் சிவி சண்முகம் கருத்தில் முரண்பாடு உள்ளது முனுசாமி மாவட்டத்தில் எம்பியை வெற்றி பெறவில்லை என கூறிவருகிறார். ஆனால் முனுசாமி , கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிட்டு அசோக்குமார் பெற்றி பெற்று தற்போது எம்பியாக உள்ளார். அருகில் உள்ள தர்மபுரியில் தான் அன்பு ராமதாஸ் வெற்றி பெற்றார்.............. எங்கேயோ இடிக்குதே ???