
சசிகலாவின் தம்பி திவாகரன், கணவர் நடராஜன் ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களிடமும் மன்னிப்பு கேட்கவேண்டுமென பேட்டி கொடுத்து சலசலப்பை ஏற்படுத்தினார் கே.பி.முனுசாமி.
அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாகை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சரும் திவாகரனின் தீவிர விசுவாசியான ஓ.எஸ்.மணியன் முனுசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆரம்ப காலங்களில் விசுவாசியாக இருந்து இடையில் ஒதுங்கி தற்போது மீண்டும் விசுவாசியாகிவிட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கே.பி.முனுசாமிக்கு பதிலளிக்கையில்,
'திவாகரனை கேள்வி கேட்க முனுசாமி யார்? முனுசாமி கட்சியில் இருந்ததை விட ஒதுக்கி வைக்கப்பட்டதுதான் அதிகம் அவர் விலை போய் விட்டார் என சாடினார்.
அதிமுக பிளவுபடாமல் இருக்க தனது உயிரையும் கொடுப்பேன் என்றுதான் திவாகரன் பேசினாரே தவிர வேறொன்றும் இல்லை. ஆனால் புல்லுருவியான முனுசாமி எதற்காக ஆவேசப்படுகிறார்.
இதில் ஆவேசப்பட என்ன இருக்கிறார். கட்சியை உடைக்க எந்த காலத்திலும் கட்சியின் தலைமையிடம் விசுவாசமாக இல்லாத முனுசாமி உணர்ச்சிவசப்படுவது ஏன் என்றும் கேள்வியெழுப்பினார்.
திவாகரனை வாரு வாரு என்று வாரிய கே.பி.முனுசாமியின் பேட்டியையடுத்து ஓ.எஸ்.மணியன், காமராஜ், செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, ஆகியோர் சொல்லி வைத்தார் போல் கே.பி.முனுசாமி யாரிடமோ விலை போய் விட்டார் என்ற வார்த்தையை அழுத்தம் திருத்தமாக சொன்னது குறிப்பிடத்தக்கது.