தேமுதிகவுக்கு 2-3 சதவீதம் ஓட்டுன்னு சொல்லறீங்க அப்புறம் ஏன் அப்பாவை தேடி வருகிறார்கள்? விஜயகாந்த் மகன் அசத்தல் கேள்வி

By sathish kFirst Published Feb 23, 2019, 12:32 PM IST
Highlights

நீங்க யாரு தே.மு.தி.க.வுக்கு 3 சீட், 4 சீட் ஒதுக்குவதற்கு? என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நெத்தியடிக் கேள்வி எழுப்பி உள்ளார்.

நீங்க யாரு தே.மு.தி.க.வுக்கு 3 சீட், 4 சீட் ஒதுக்குவதற்கு? என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நெத்தியடிக் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிமுக - பிஜேபி கூட்டணியில் முந்திக்கொண்டு பாமக 7+1 வாங்கிக்கொண்டு  அதிமுகவிற்கு தடபுடல் விருந்து அளித்தது. இதனையடுத்து கூட்டணியில் சேரவியுள்ளதாக சொல்லப்படும் தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதில் தொகுதி இழுபறி நீடித்து வந்தது அடுத்து, அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரசின் முன்னால் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் சந்தித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை கும்பகோணத்தில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், 3 சீட், 4 சீட் ஒதுக்குவதற்கு நீங்கள் யார் என்றார். தே.மு.தி.க.வுக்கு 2-3 சதவீதம் ஓட்டுகள் தான் என கூறுபவர்கள் விஜயகாந்தை ஏன் தேடி வருகிறார்கள்? தேமுதிகவின் வலிமை சொந்த கட்சியினரை விட மற்ற கட்சிகளுக்கு தெரிந்துள்ளதாக  கூறியுள்ளார். குகைக்குள் இருந்தாலும் சிங்கம், சிங்கம் தான் என்றும் பேசினார். 

மேலும், காலையில் எழுந்து தமது தந்தை விஜயகாந்தின் முகத்தில் முழிக்கிறேனோ இல்லையோ, தினந்தோறும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தேடி வந்து விடுவதாக கூறினார். விஜயகாந்த் இல்லாமல் ஆட்சி அமையாது என விஜய பிரபாகரன் தெரிவித்தார். 

click me!