
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் தேர்வு நடந்தது.
தேமுதிகவின் நிரந்தர பொதுச்செயலாளராக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். துணை செயலாளர்களாக சுதீஷ், இளங்கோவன் உள்ளிட்ட 4 பேரை விஜயகாந்த் நியமித்தார்.
இதுவரை தேமுதிகவின் தலைவராக இருந்த விஜயகாந்தை பொதுச்செயலாளராக நியமித்தும் கட்சி தொடர்பான எந்த முடிவையும் எடுக்க விஜயகாந்துக்கு அதிகாரம் அளித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.