உழைத்தா பிழைத்தார்கள்? ஜெயலலிதாவை அண்டி பிழைத்ததுதான் சசிகலா குடும்பம்..! மருது அழகுராஜ் தாக்கு..!

 |  First Published Sep 30, 2017, 12:57 PM IST
sasikala family misuse jayalalitha



ஜெயலலிதா சமாதியில் குற்றவாளியாக இருப்பதற்கு காரணம் சசிகலாவும் அவரது குடும்பமும்தான் என நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பேசியிருப்பதாவது:

Latest Videos

ஓடி ஓடி உழைத்து 130 படங்களில் நடித்து உழைத்து சம்பாதித்து உயர்நிலையை அடைந்த ஜெயலலிதா, இறுதியாக தற்போது சமாதியில் குற்றவாளியாக இருப்பதற்கு சசிகலாவும் அவரது குடும்பமும்தான் காரணம்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதற்கு சசிகலாவும் அவரது குடும்பமும்தான் காரணம். ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் ஜெயலலிதாவிற்கு கிடையாது. சசிகலாவும் அவரது குடும்பமும் ஜெயலலிதாவைப் பயன்படுத்தி தவறான வழியில் சம்பாதித்துவிட்டார்கள். 

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த தவறுகளை கண்டும் காணாமல் விட்டதுதான் ஜெயலலிதாவுக்கு கிடைத்த குற்றவாளி என்ற அவப்பெயருக்கு காரணம். சசிகலாவின் மீது நம்பிக்கை தன் பெயரையும் கெடுத்துக்கொண்டார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் பயணித்த சசிகலா, அதற்காக பெற்றுக்கொண்ட விலை, மிகவும் அதிகம். சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கோடி கோடியாக சொத்து இருக்கிறது. இத்தனை சொத்தும் உழைத்தா சம்பாதித்தார்கள்? ஜெயலலிதாவை அண்டி இருந்து அவரது பதவியை பயன்படுத்தி சசிகலா குடும்பத்தினர் சம்பாதித்தது. ஆனால் அவப்பெயர் ஜெயலலிதாவுக்கு கிடைத்துவிட்டது. இத்தனைக்கும் காரணம் சசிகலாவும் அவரது குடும்பமும்தான்.

இவ்வாறு சசிகலா குடும்பத்தின் மீது மருது அழகுராஜ் குற்றம்சாட்டினார். 
 

 

 

click me!