
தமிழக அரசியல் சூழ்நிலையையும், புதிய ஆளுநர் நியமனத்தையும் இணைத்து பார்க்கக் கூடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
கூறியுள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிகாலம் முடிந்த பிறகு, மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
வித்யாசாகர் ராவ், கடந்த ஒரு வருடகாலமாக தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்து வந்தார். இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித்தை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
அதேபோல், மேகாலயா, அசாம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும் புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
தமிழகத்துக்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித், வரும் புதன்கிழமை அன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசியல் சூழ்நிலையையும், புதிய ஆளுநர் நியமனத்தையும் இணைத்து பார்க்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், புதிய ஆளுநர் நியமனம், தமிழக அரசியல் சூழ்நிலையில், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் தமிழிசை கூறியுள்ளார்.