பெரிய மனசுய்யா கேப்டனுக்கு! தே.மு.தி.க.வை சின்னாபின்னமாக்கிய ஸ்டாலினுக்கு திடீர் வாழ்த்து!

By vinoth kumarFirst Published Aug 30, 2018, 10:33 AM IST
Highlights

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தே.மு.தி.க முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்ததுடன் அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்களையும் தி.மு.கவில் இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு கேப்டன் திடீரென வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின்  போது தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க மிக கடுமையாக முயன்றது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தே.மு.தி.க முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்ததுடன் அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்களையும் தி.மு.கவில் இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு கேப்டன் திடீரென வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின்  போது தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க மிக கடுமையாக முயன்றது. ஆனால் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் வைகோவின் சந்திப்பு அந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. 

தே.மு.தி.க கூட்டணிக்கு வராது என்பதை தெரிந்து கொண்ட  உடன் கேப்டனுக்கு வலது கரமாக இருந்த சந்திரகுமார், எம்.எல்.ஏக்கள் சி.ஹெச்.சேகர், பார்த்திபன் ஆகியோரை வைத்து விஜயகாந்துக்கு எதிராக செய்தியாளர் சந்திப்பு நடத்தியது தி.மு.க.  மேலும் சந்திரகுமார், பார்த்திபன், சி.ஹெச்.சேகர் ஆகியோருக்கு அவர்களின் தொகுதியில் தி.மு.க சார்பில் சீட் கொடுக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலுக்கு பின்னரும் கூட தே.மு.தி.க மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலானவர்களை தி.மு.க தனது கட்சியில் சேர்த்துக் கொண்டது. இதனால் கட்சிக்கு மாவட்டச் செயலாளர்களை கூட போட முடியாமல் விஜயகாந்த் தவித்தார்.

அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விஜயகாந்த் பேட்டி அளித்திருந்தார். அப்போது கூட தே.மு.தி.க – தி.மு.க கூட்டணி அமையாததற்கு காரணமே ஸ்டாலின் தான் என்று கூறினார். மேலும் உடல் நலம் இல்லாமல் இருந்த கலைஞரை பார்க்க விடாமல் ஸ்டாலின் என்னை தடுத்துவிட்டார் என்றும் விஜயகாந்த் தெரிவித்திருந்தார். அத்துடன் ஸ்டாலினால் ஒரு போதும் தமிழகத்தின் முதலமைச்சராக முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

 

 இந்த அளவிற்கு ஸ்டாலின் மீது விஜயகாந்த் கோபமாக இருக்க காரணம், தனது கட்சியை உடைத்து சின்னாபின்னமாக்கியது தான் என்று கூறப்படுகிறது. ஆனால் திடீரென அனைத்தையும் மறந்துவிட்டு விஜயகாந்த் தி.மு.க தலைவராக தேர்வாகியுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். தனது கட்சியை உடைத்த ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து தனக்கு பெரிய மனது இருக்கிறது என்பதை காட்ட விஜயகாந்த் இவ்வாறு செய்தார் என்று கூறப்பட்டாலும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாக கூட இந்த வாழ்த்து இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

click me!