
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுடன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று சந்தித்து பேசி வருகிறார்.
சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை, தம்பிதுரை சந்தித்து பேசி வருகிறார்.
நேற்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, எம்.எல்.ஏ. சரவணன் தொடர்பான வீடியோ விவகாரம் குறித்து ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் முறையிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
மேலும், ஆளும் தகுதியை எடப்பாடி பழனிசாமி அரசு இழந்து விட்டதாகவும், ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக கூறினார்.
இந்த நிலையில், அதிமுக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று காலை சுமார் 11 மணியளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசி வருகிறார்