
ஆர.கே.நகர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வைரக்கண்ணன், தகவல் அறியும் உரிமை சட்டப்படி எழுப்பிய கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வந்த புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
சென்னை, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வைரக்கண்ணன், தகவல் அறியும் உரிமை சட்டப்படி தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.
அதில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து அதிமுக அம்மா அணி பொது செயலாளர் டிடிவி தினகரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
வழக்கறிஞர் வைரக்கண்ணன் கேள்விக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்திருந்தது. தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அந்த பதிளில், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி, மாநில தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறியுள்ளது.
மேலும், பண பட்டுவாடா குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் தேலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.