புதிய துணை குடியரசு தலைவர் யார்? பாஜக கூட்டணி வேட்பாளரை வீழ்த்துமா எதிர்க்கட்சிகள்.. இன்று வாக்குப்பதிவு.!

By vinoth kumar  |  First Published Aug 6, 2022, 8:19 AM IST

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து, புதிய துணை குடியரசுத் தலைவர் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்க உள்ளது. 


புதிய குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் ஜெகதீப் தங்கம் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகின்றனர்.  

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து, புதிய துணை குடியரசுத் தலைவர் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்க உள்ளது. இதில், ஆளும் பாஜக கூட்டணி சார்பில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தங்கரும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் ஆளுநருமான மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பாம்பு கடித்து பலியான அண்ணன்.. இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த தம்பியும் அதேபோல பலி.. விடாமல் துரத்தும் பாம்பு.!

இதில், மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த 788 எம்பி.க்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார். குடியரசுத் தலைவர் தேர்தல் போல் இல்லாமல், இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றத்தில் மட்டுமே நடக்கும். இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம். பின்னர், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, புதிய துணை குடியரசுத் தலைவர் யார் என்பது அறிவிக்கப்படும்.

இத்தேர்தலைப் பொறுத்த வரையில், ஆளும் கட்சி வேட்பாளர் ஜெகதீப் தங்கர் வெல்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான மார்கரெட் ஆல்வாவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா ஆதரவு தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;-  மத்திய அரசுக்கு நெருக்கடி: கறுப்பு ஆடை அணிந்து காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் போராட்டம்

click me!