தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் சில தினங்களுக்கு முன்பு நீக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில்தான் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகுவதாக அறிவித்தார். இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்பட்டவர்.
அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகியதை அடுத்து புதிய ஆசிரியராக கல்யாணசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்த நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தரப்பினர் கைக்கு பத்திரிகையின் நிர்வாகம் சென்றதை அடுத்து அவர் அதை விமர்சித்ததன் காரணமாக நமது எம்ஜிஆர் நாளிதழில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், ஓபிஎஸ்- இபிஎஸ் வசம் அதிமுக சென்றதும் நமது அம்மா என்ற நாளிதழ் தொடங்கப்பட்டு அதற்கு மருது அழகுராஜ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இவருக்கு போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதையும் படிங்க;- அதிமுக வழக்கில் அதிரடி திருப்பம்.. இனிமே இவர்தான் எல்லாம் - இபிஎஸ் Vs ஓபிஎஸ் !
தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் சில தினங்களுக்கு முன்பு நீக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில்தான் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகுவதாக அறிவித்தார். இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்பட்டவர்.
இந்நிலையில், நமது அம்மா நாளேடின் புதிய ஆசிரியர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளருமான பேராசிரியர் கல்யாணசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க;- ஓபிஎஸ் சசிகலா ஒன்றிணைவார்களா? டிடிவி.தினகரன் கூறிய பரபரப்பு தகவல்..!
இதனையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கொறடா எஸ்.பி.வேலுமணியை சந்தித்து கல்யாணசுந்தரம் வாழ்த்து பெற்றார்.