இந்து என்றலே சிலருக்கு அலர்ஜி... அவர்களை திருத்த முடியாது... துணை குடியரசுத் தலைவர் விமர்சனம்!

By Asianet TamilFirst Published Jan 13, 2020, 6:42 AM IST
Highlights

ஒரு முறை‘கிழக்கு பகுதிகளில் துன்பப்படுவோர், அகதிகளுக்கு புகலிடம் தந்த நாடு இந்தியா’ என்று விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதை முன்னிறுத்திதான் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இதை சிலர் சர்ச்சைக்குரியதாக்கி பேசுவது வருத்தம் அளிக்கிறது. இந்தச் சட்டம் குறித்து எவ்வளவோ விளக்கம் கூறிய பிறகும் விமர்சனங்கள் எழுவதை என்ன சொல்ல முடியும்?

சிலருக்கோ இந்து என்று உச்சரித்தாலே அலர்ஜி ஏற்பட்டுவிடுகிறது. அவர்களை எல்லாம் நம்மால் திருத்த முடியாது என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் வெளிவரும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ பத்திரிகையின் நூற்றாண்டு விழா ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார். இந்த விழாவில் அவர் பேசும்போது, “சுவாமி விவேகானந்தரின் போதனைகள், அவருடைய வாழ்வியல் தத்துவங்களை நாம் என்றும் மறக்க முடியாது. குரு, ஆசிரியர்,  சமுதாய சீர்திருத்தவாதி என அவருக்கு பன்முகங்கள் உண்டு. இந்தியாவில் ஆன்மிகத்தை வலியுறுத்தியவர்களில் விவேகானந்தர் முக்கியமானவர்.

ஒரு முறை‘கிழக்கு பகுதிகளில் துன்பப்படுவோர், அகதிகளுக்கு புகலிடம் தந்த நாடு இந்தியா’ என்று விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதை முன்னிறுத்திதான் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இதை சிலர் சர்ச்சைக்குரியதாக்கி பேசுவது வருத்தம் அளிக்கிறது. இந்தச் சட்டம் குறித்து எவ்வளவோ விளக்கம் கூறிய பிறகும் விமர்சனங்கள் எழுவதை என்ன சொல்ல முடியும்?
நம்முடைய கலாசாரம், பண்பாடு, முன்னோர் கூற்று ஆகியவறை  ஒரு போதும் மாற்றிவிட முடியாது. மக்களிடையே வேறுபாடுகளையும் பிரச்சினைகளையும் சிலர் சுவர்கள் போல எழுப்பி இருக்கிறார்கள். அந்தச் சுவர்களை வீழ்த்தவேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு அது இப்போது அவசியமாக மாறியிருக்கிறது. ஆனால், எல்லா மதங்களுமே மரியாதைக்குரியவை என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறோம்.
நம்முடைய எல்லோருடய உடலிலும் ஓடிக்கொண்டிருப்பது இந்திய ரத்தம். எல்லா மதங்களையும் மதித்து நடப்பதுதான் இந்தியாவின் தன்மை. ஆனால், சிலருக்கோ  ஹிந்து என்று உச்சரித்தாலே அலர்ஜி ஏற்பட்டுவிடுகிறது. அவர்களை எல்லாம் நம்மால் திருத்த முடியாது. எல்லோரையும் போல அவர்களுக்கும் அனைத்து உரிமைகளும் உள்ளன. அதேவேளையில் அவர்களுடைய எண்ணம் மட்டும் தவறாக இருக்கிறது.” என்று வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.

click me!