பசு மாட்டை தொட்டுப் பாருங்க ! கெட்ட எண்ணங்களே வராது !! பாஜகவினரையே பதற வைத்த காங்கிரஸ் அமைச்சர் !!

Selvanayagam P   | others
Published : Jan 13, 2020, 06:28 AM IST
பசு மாட்டை  தொட்டுப் பாருங்க !  கெட்ட எண்ணங்களே வராது !!  பாஜகவினரையே பதற  வைத்த காங்கிரஸ் அமைச்சர்  !!

சுருக்கம்

பசுவை தொடுவதன் மூலம்எதிர் மறை எண்ணம் ஏற்படாது என மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின்  பெண் அமைச்சர்  யசோமதி தாக்கூர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான ஆட்சியில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சியின்  எம்.எல்.ஏ.,வான யசோமதி தாக்கூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

இவர் கடந்த 11 ம் தேதி அமராவதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் . அப்போது அவர் பேசும்போது, எங்கள் கலாசாரத்தில் பசுவை தொட்டால் எந்த விதமான எதிர் மறை எண்ணமும் ஏற்படாது . மேலும் பசு ஒரு புனிதமான விலங்கு,அவை மட்டுமல்ல வேறு எந்த விலங்காக இருந்தாலும் அவற்றை தொடுவதால் அன்பின் உணர்வை தருகிறது என கூறினார்

இவர் ஏற்கனவே  ஜில்லா பரிஷத் தேர்தல் பிரசாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்து விட்டோம் எங்கள் பைகள் இன்னும் சூடாக இல்லை என்றார். 

மேலும் வாக்காளர்கள் எதிர்கட்சியிடம் இருந்து பணத்தை பெற்று கொள்ளலாம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் பேசி யசோமதி தாக்கூர் சர்ச்சைக் கருத்தை தெரிவித்திருந்தார்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!
ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!