
திண்டுக்கல் சீனிவாசன் போன்ற ஒரு சாப்பாட்டு ராமனை ஏவிவிட்டு எடப்பாடி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் எனவும் விசாரணை கமிஷனை நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்காமல் விரைவில் முடிக்க வேண்டும் எனவும் டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் அடையாறில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நடைபெற்ற சமபவங்களை மறைக்க முடியாது எனவும் விசாரணை கமிஷன் நடவடிக்கையில் அனைத்து உண்மைகளும் வெளி வரும் எனவும் தெரிவித்தார்.
விசாரணை கமிஷன் பதவிகாலம் அதிகபட்சம் ஒன்றரை மாதங்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் பழனியப்பன், செந்தில்பாலாஜி மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அரசாங்கம் விரிக்கும் வலையில் மாட்டக்கூடாது என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டில் தங்கியுள்ளதாகவும், அதற்கு பெயர் பயம் இல்லை எனவும் தெரிவித்தார்.
திண்டுக்கல் சீனிவாசன் போன்ற ஒரு சாப்பாட்டு ராமனை ஏவிவிட்டு எடப்பாடி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் எனவும் விசாரணை கமிஷனை நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்காமல் விரைவில் முடிக்க வேண்டும் எனவும் வெற்றிவேல் வலியுறுத்தியுள்ளார்.