
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்,தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை கூட்டும் விதமாக நடிகர் கமல் அரசியலில் குதிக்க உள்ளார்.
நடிகர்கமலுக்கு ஒருபுறம் மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும், மறுபுறம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நடிகர் கமல், தான் தனியாக தான் கட்சி தொடங்க உள்ளதாகவும், யாருடனும் கூட்டணி வைக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
அதே சமயத்தில், சமீபத்தில் ஒரு பிரபல நாளிதழ்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அரசியலில் தீண்டாமை என்றஒன்று இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, நிர்வாகம் செய்வதில் சில உடன்பாடுகளுக்கு பாஜக ஒத்துழைக்கும் தருவாயில், அவர்களுடன் கைகோர்த்து ஆட்சியை நடத்த தயார் என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சி தொடங்குவது தொடர்பாக, அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள நடிகர் கமல்,இந்த ஆண்டு இறுதிக்குள் கட்சி தொடங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும்,அரசியலுக்கு வந்த உடன், தான் நடிப்பதை நிறுத்திக்கொள்வதாகவும் உள்ளார் கமல். இதற்கு முன்னதாக நடிகர் ரஜினி குறித்து கருத்து தெரிவித்த கமல், ரஜினி பா.ஜ.வில் இணைவது அவருக்கு பொருத்தமாக இருக்கும் என தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் தற்போது தானே பா.ஜ.கவில் இணைய தயாராக உள்ளேன் என குறிபிட்டுள்ளது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது