
கமலின் புதிய கட்சியில் இணையும் "நடிகர்கள் பட்டியல் இதோ"..!
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்,தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை கூட்டும் விதமாக நடிகர் கமல் அரசியலில் குதிக்க உள்ளார்.நடிகர் கமலுக்கு ஒருபுறம் மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும், மறுபுறம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் கட்சி தொடங்க உள்ள கமல், அடுத்தக் கட்டத்தை எட்டுவதற்கு முன்னதாகவே அவருடைய கட்சியில் இணைய சில நடிகை நடிகர்கள் தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, அதிமுகவில் பேச்சாளராக இருந்த வையாபுரியும் கமல் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து, அதற்கான பேச்சுவார்த்தையும் முடிவுற்றதாம்.
இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய,நடிகர் பரணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
அதேபோல் அம்பிகா, நமீதா, அபிராமி, ஆர்த்தி என நிறைய நடிகர் நடிகைகள் கமலின் பு திய கட்சியில் இணையத் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் வேறு எந்த பிரபலங்கள் கட்சியில் இணைய உள்ளார்கள் என்பதை அடுத்தடுத்த செய்திகளில் தொடர்ந்து பார்க்கலாம்