
குடியரசு தலைவர் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படாது என்றும், எக்காலத்திலும் 356 வது சட்டபிரிவை பயன்படுத்த மாட்டோம் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
17 ஆண்டுகள் கழித்து உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டதாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை வெங்கய்யா நாயுடு சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
17 ஆண்டுகள் கழித்து உருவாக்கப்பட் ஜி.எஸ்.டி9ய அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன. ஜி.எஸ்.டி.யில் பிரச்சனை இருந்தால் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஜி.எஸ்.டி. சட்டம் நிறைவேற்றப்பட்டதுஜி.எஸ்.டியை தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.அனைத்து கட்சிகளின் துணையுடன் ஜி.எஸ்.டி சட்டம் நிறைவேற்றப்பட்டது.
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவார்.குடியரசு தலைவர் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படாது. எக்காலத்திலும் 356 சட்டப்பிரிவை பயன்படுத்த மாட்டோம்.
யார் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதை சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.