
பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அண்மை காலமாக நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது குறித்த தனது பல்வேறு கருத்துக்களை சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் குறித்து, 420 (மோசடி பேர்வழி) என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பதிவு பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.
ரஜினி குறித்து டுவிட்டர் பக்கத்தில் அவர் தொடர்ந்து கருத்துக்களை கூறி வரும் நிலையில், அண்மையில் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்தது.
இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி, நடிகர் ரஜினிகாந்த் இலங்கை சென்று மீனவர்களை மீட்பாரா என்று டுவிட்டர் பக்கத்தில் கேள்வி கேட்டுள்ளார்.
இந்திய மீனவர்களிடம் இலங்கை கடற்படை கடுமையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க நடிகர் ரஜினிகாந்த் இலங்கை சென்று மீனவர்களை மீட்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து ரஜினி குறித்த பதிவுகளை வெளியிடும் சுப்பிரமணியன் சுவாமி, இந்த முறை தமிழக மீனவர்கள் விவகாரத்தைக் கொண்டு நடிகர் ரஜினிகாந்தை விமர்சனம் செய்துள்ளார்.