"வாழ்வாதாரத்துக்காக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்" - தமிழிசை பேட்டி

 
Published : Jul 09, 2017, 04:26 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
"வாழ்வாதாரத்துக்காக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்" - தமிழிசை பேட்டி

சுருக்கம்

tamilisai pressmeet about fishermen

எல்லைத் தாண்டி மீன் பிடித்தாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். அவர்கள் 50 ரூபாய் அவராதமும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி சென்றதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களது படகு, வலை உள்ளிட்டவைகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் சர்வதேச மீனவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பதுடன், 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்படும் என கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் கடற்தொழில் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த திருத்தச் சட்டத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இலங்கை சென்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ரவி கருணாநாயகேவைச் சந்தித்தார்.

அப்போது மீனவர் பிரச்சனைகள் குறித்து பேசியதாகவும், தமிழக மீனவர்களின் படகுகள் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இலங்கை அமைச்சர் உறுத அளித்ததாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழிசை சௌந்திரராஜன், தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் முடிவை கைவிட இலங்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மீனவர்களை பாதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசு வலியுறுத்தும் என்று கூறியுள்ளார்.தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக எல்லை தாண்டுகிறார்கள் என்று கூறினார்.

மேலும் எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவை ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்குப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!
எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!