காஷ்மீரைப் போலவே அவங்களுக்கும் இந்த நிலைமை வந்துருமோ? பேய் கதை சொல்லி பீதியை கிளப்பிய வீரமணி...

By sathish kFirst Published Aug 6, 2019, 5:04 PM IST
Highlights

மக்களின் கருத்து அறிந்த பிறகு அல்லவா இப்படி முடிவெடுத்திருக்க வேண்டும்? வடகிழக்கு மாநிலங்களுக்கும் இந்த நடவடிக்கை தொடருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கி வீரமணி  பீதியை கிளப்பியள்ளார்.

மக்களின் கருத்து அறிந்த பிறகு அல்லவா இப்படி முடிவெடுத்திருக்க வேண்டும்? வடகிழக்கு மாநிலங்களுக்கும் இந்த நடவடிக்கை தொடருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கி வீரமணி  பீதியை கிளப்பியள்ளார்.

காஷ்மீர் தொடர்பாக மத்திய பி.ஜே.பி. அரசு எடுத்துள்ள முடிவு என்பது - சட்டப் போராட்டத்துக்கு வழிவகுக்கும் - நடக்க விருக்கும் தேர்தல்கள்மூலம் அம்மாநில மக்கள் தங்கள் கருத்தினை வெளிப் படுத்துவார்கள் என்பதில் அய்யமில்லை. காஷ்மீரைப் பிரித்ததுபோல மற்ற மற்ற மாநிலங்களையும் பிரிக்கமாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை  கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காஷ்மீர் மாநிலத்திற்கு 1954 முதல் வழங்கப்பட்டிருந்த தனித்துவ உரிமை களை ரத்து செய்து - இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 370, 35-ஏ ஆகியவைகளை மாற்றி அமைத்து, இரண்டாக அம் மாநிலத்தை - 1. காஷ்மீர் யூனியன் பிரதேசம் (சட்டப் பேரவையுடன் கூடியது), 2. சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேச மாக லடாக்கும் (அந்தமான் போல) என்று பிரிக்கப்பட்டுள்ளது. அங்கு யாரும் குடி யேறலாம்; நிலம் வாங்கலாம் என்பது போன்ற மாற்றங்கள் இதனால் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

1954 இல் நாடாளுமன்றத்தில் பிரதமர் அளித்த வாக்குறுதி என்னாயிற்று?

1954 காஷ்மீர் மக்களுக்கு நாடாளு மன்றத்தில் இந்திய அரசின் சார்பாக பிரதமர் கொடுத்த வாக்குறுதி இதன் காரணமாக மாற்றப்பட்டுள்ளது.

பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். நீண்ட காலமாகக் கூறிய வாக்குறுதி இதன்மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாகாணங்களே - மாநிலங்களே கூடாது - கூட்டாட்சிக்குப் பதிலாக  ஒற்றை ஆட்சி (Unitary System of Government instead of Federal) என்ற கொள்கைத் திட்டம் வெகு வேகமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டி ருக்கிறது.

காஷ்மீர் மாநில மக்கள் கருத்து அறிந்து நடைபெற்றதாகக் கூற வாய்ப்பில்லை. காரணம், அங்கே சட்டமன்றம் இல்லை. பல மாதங்களுக்கு முன்பே கலைக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி தான் நடைபெறுகிறது.

அம்மக்கள் கருத்தறிந்து, அவர்களது முன்னேற்றம், வளர்ச்சிக்காகத்தான் இந்த மாற்றம், புதிய ஏற்பாடு என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் கூற்று சரியானால், ஆளுநர் ஆட்சியில் அது நடைபெற்றுள்ளது பல விமர்சனங் களுக்கு இடம் அளிக்காதா?

1954 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்ட - ஜம்மு காஷ்மீர் பற்றிய ஆணை மற்றும் 20.6.1964 இல் திருத்தப்பட்ட அரசமைப்புச் சட்டம் அந்த ஆணையின் 2 ஆவது பிரிவின்கீழ் உள்ள 3 ஆவது ஷரத்து கூறுகிறது.

PART-I
(a)  Add the following further proviso, namely:-
‘‘Provided further that no Bill providing for increasing or diminishing the area of the State of Jammu and Kashmir or altering the name or boundary of that State shall be introduced in Parliament without the consent of the Legislature of that State.''

இதே பகுதி மீண்டும் 1988 ஆம் ஆண்டு 61 ஆவது அரசியல் சட்டத் திருத்தம்மூல மும், மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டமன்றம்' என்பது 'மக்கள் பிரதிநிதி களின் விருப்பம்' என்றே பொருள் அல்லவா?

இதன்படி இப்போது நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சரால் முன்மொழியப் பட்டு, அவசரமாக ஒரே நாளில் நிறை வேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு, சட்டமாகியுள்ள தானது - சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுக்கக்கூடும். ஏற்கெனவே ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

சட்டசபை என்பது அம்மக்களின் கருத்துகளான ஜனநாயகத்தைக் காப்பாற் றும் அவையாகும். அதன் ஒப்புதல் இல்லாதது மட்டுமல்ல; முக்கிய முன்னாள் முதல்வர்கள் கருத்துக் கூறுமுன்பே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, 144 சட்டமும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

பா.ஜ.க. அரசினர் அடிக்கடிப் பயன் படுத்தும் 'co-operative Federalism'  கூட்டுறவு மனப்பாங்குடன் கூடிய கூட்டாட்சி என்பதற்கும், இத்தகைய நடவடிக்கைகள் பொருத்தமாகுமா என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்று பெருமையுடன் இந்தியாபற்றி நாம் கூறும் நிலையில், காஷ்மீரத்தில் இப்படி ஒரு அசாதாரண நிலை ஏற்படுத்தக் கூடிய பார தூர விளைவுகள்பற்றியும், இவர்கள் கூறும் வளர்ச்சியும், மாற்றமும் அம்மக் களால் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளப் படுகிறது என்பது முக்கியம்! அம்மக்கள் கருத்து  எது என்பது இனி நடைபெறும் தேர்தல்கள் மூலம் தான் தெரிய வரும்.

ஜனநாயக மரபு, அரசியல் சட்ட நெறி முறைகள் எல்லாவற்றையும்விட மேலா னவை என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. மற்ற மாநிலங்களையும்கூட இந்தத் தடாலடி முடிவுகள் அச்சுறுத்துவது போல அமைந்துள்ளது என்பதிலும் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.

காஷ்மீரைப் போலவே வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகலாந்து, சிக்கிம், மேகாலயா, அசாம் மாநிலங் களுக்கும் உள்ள தனி வாய்ப்புகள் என்னாகும் என்பது கேள்விக்குறியாகும். வடகிழக்கு மாநிலங்களில் பதற்றத்தை உண்டாக்குவது நல்லதல்ல! என மற்ற சில மாநிலங்களை இந்த லிஸ்டில் சேர்த்து பீதியை கிளப்பியுள்ளார்.

click me!