கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்ற ஜெனிபர் சந்திரன் காலமானார்..!

By vinoth kumarFirst Published Aug 6, 2019, 4:37 PM IST
Highlights

அ.தி.மு.க. மாநில மீனவர் அணியின் இணைச் செயலர் பதவி வழங்கப்பட்டது. மேலும், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியும் ஜெனிபர் சந்திரனுக்கு வழங்கப்பட்டது. இதன் பின்னர் 2010-ல் மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து ஜெயலலிதாவால் ஜெனிபர் சந்திரன் நீக்கப்பட்டார். 

திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

கடந்த 1996-ம் ஆண்டு நடந்த திருச்செந்தூர் சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார். பின்னர், தி.மு.க. மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக அ.தி.மு.க., ஆட்சியின் போது 2004-ம் ஆண்டில் ஜெனிபர் சந்திரன் அ.தி.மு.க.வில் ஐக்கியமானார். 

அவருக்கு அ.தி.மு.க. மாநில மீனவர் அணியின் இணைச் செயலர் பதவி வழங்கப்பட்டது. மேலும், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியும் ஜெனிபர் சந்திரனுக்கு வழங்கப்பட்டது. இதன் பின்னர் 2010-ல் மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து ஜெயலலிதாவால் ஜெனிபர் சந்திரன் நீக்கப்பட்டார்.

 

 இந்நிலையில், சமீப காலமாக, ஜெனிபர் சந்திரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, ஜெனிபர் சந்திரன் உடல் நலக்குறைவுக்காக, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி, மருத்துவமனையில் இன்று ஜெனிபர் சந்திரன் காலமானார்.

click me!