சீமான் மாதிரி பொண்டாட்டி, மாமனார் சொத்திலா வாழ்கிறேன்? என்று கடும் விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு.
சீமான் மாதிரி பொண்டாட்டி, மாமனார் சொத்திலா வாழ்கிறேன்? என்று கடும் விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார் விடுதலை சிறுத்தைகளின் வன்னி அரசு.
நாம் தமிழர் கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் அண்மைக் காலமாக கருத்து மோதல்கள் எழுந்துள்ளன. அதிலும் குறிப்பாக மேடையில் சீமான் செருப்பை எடுத்து காட்டியதில் இருந்தே அதிகரித்து விட்டதே என்று கூறலாம்.
இப்படிப்பட்ட தருணத்தில் சீமான் மாதிரி பொண்டாட்டி, மாமனார் சொத்தில் வாழ்கிறேனா என்று சீறியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஆர்எஸ்எஸ் செயல் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தும் நபராக சீமான் இருக்கிறார். பாஜகவின் அஜெண்டாவுக்குள் தான் அவர் மற்ற கட்சிகளை விமர்சிக்கிறார். நாம் தமிழர் கட்சி என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் நகைச்சுவை பிரிவுதான்.
பிழைப்பு வாதத்துக்காக பல விஷயங்களை சீமான் பேசி வருகிறார். தமிழ் தேசியம் கருத்துகளை முன் எடுத்து செல்வதில் எங்களை போன்றவர்களுக்கு உண்டு. அதில் குழப்பம் செய்பவர் தான் சீமான். ஆகையால் நாங்கள் அவரை கடுமையாக எதிர்க்கிறோம்.
விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கும், வன்னியரசு, சீமான் ஆகியோருக்கு என்று தனிப்பட்ட பகைமை என்பது எதுவுமே இல்லை. அவர்களின் கோட்பாட்டு புரிதல் அடிப்படையில் நாங்கள் எதிர்க்கிறோம்.
நாம் தமிழர் கட்சியின் செயல்திட்டம், மதசார்பின்மை, சமூகநீதிக்கு எதிரானது. ஆர்எஸ்எஸ் கோட்பாட்டை தான் நாம் தமிழர் கட்சி வேறு வடிவங்களில் முன் வைக்கிறது. 2012ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியானது ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பேசுகிறது என்று அன்றே சொல்லி இருக்கிறேன்.
அவரால் (சீமான்) நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அதற்கு பதிலாக ஏதேதோ பேசுகிறார். நான் ஒன்றும் அவரை போன்று மாமனார் சொத்து, பொண்டாட்டி சொத்தில் வாழவில்லை.
உயிரை இந்த சமூகத்துக்கு கொடுப்பதற்காக விடுதலை சிறுத்தை கட்சிக்கு வந்தவன். சமூகத்தை என்னை நான் அர்ப்பணித்து கொண்டவன். சீமான் போல் நோட்டீஸ் அனுப்பி கட்சிக்கு நிதி வசூல் பண்ணியவன் நானல்ல.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் நிதி வசூலிப்பது என்பது வேறு. ஆனால் நான் தான் தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கிறேன் என்று ஏமாற்றி கட்டாய வசூல் செய்கின்றனர். இந்த வகையான சுரண்டல் கேவலமான ஒன்று.
இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் சீமானின் கோயல்பல்ஸ் பிரச்சாரம் என்பது ஒரு உத்தியே. தற்காலிகமாக லாபம் அடையலாம், தற்காலிகமாக ஏமாற்றலாம். நீண்டகாலம் இது எடுபடாது.
தேசிய அரசியலில் ஸ்டாலின் பயணிக்க வேண்டும் என்ற திருமாவளவன் கருத்தை சீமான் எதிர்ப்பது பாஜகவை பாதுகாப்பதற்கான முயற்சிதான். இந்த முயற்சி சரியானதா? ஆக்கப்பூர்வமானதா? என்று பேச வேண்டும். ஆனால் சொன்னதை எதிர்ப்பதன் மூலம் சீமானின் குரல் யாருடைய குரல் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எங்களின் பயணம் என்பது நீண்ட தூர பயணம். தமிழ் தேசியத்துக்கு போராடுவது தான் எங்கள் இலக்கு. அதற்காக போராடுவோம் என்று வன்னி அரசு கூறி உள்ளார்.