உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி தரலாம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கூறி இருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி தரலாம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கூறி இருக்கிறார்.
undefined
வாரிசு அரசியல் என்றால் அரசியல் களத்தில் அனைவரும் கைகளை யோசிக்காமல் காட்டுவது திமுகவை நோக்கி தான். அந்தளவுக்கு கட்சிக்கும், அதில் உள்ளவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இந்த வார்த்தைக்கு இருக்கிறது.
திமுகவில் கருணாநிதிக்கு பின்பு ஸ்டாலின், அவருக்கு பின்னால் உதயநிதி என்று இணைய ஊடகங்களிலும், பொது வெளியிலும் அறிவிக்கப்படாத பேச்சுகள், விவாதங்கள் இன்றளவும் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. திமுகவில் இப்போது எம்எல்ஏவாக ஆகி இருக்கும் உதயநிதி தமக்கு என ஒரு வட்டத்தில் அரசியல் களமாடி வருவது அனைவருக்கும் தெரிந்து ஒன்று.
அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வாரிசு அரசியல் என்றால் திமுகவை முந்திக் கொண்டு இன்றும் வசைபாடி வருகின்றன. ஸ்டாலின் முதல்வராக இருக்கும் இத்தருணத்தில் உதயநிதியை அமைச்சராக்கி பார்க்க வேண்டும் என்பது உடன்பிறப்புகளின் விருப்பம் என்று அமைச்சர்கள், எம்பிக்கள் என பலரும் கூறி வருகின்றனர்.
இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ முடிவு அல்லது அறிவிப்பு இதுவரை திமுக தலைமையிடம் இருந்து வெளியாகவில்லை. இந்த தருணத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி தரலாம் என்று கருத்து கூறி இருக்கிறார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா.
சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது ஹெச். ராஜா கூறியதாவது: இலங்கையில் அந்நாட்டு மீனவர்கள் பயன்படுத்துவது போன்று மீன்பிடி உபகரணங்களை தமிழக மீனவர்கள் பயன்படுத்தினால் பிரச்சனை வராது.
ராஜிவ் படுகொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்யப்பட்டால் மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் பிரச்சாரம் மேற்கொள்ளும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி தரக்கூடாது என்று எந்த அரசியல்வாதியாவது சொன்னாரா? யாருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும், கொடுக்கக்கூடாது என்று நான் சொல்லக்கூடாது. அது முதல்வரின் முன் உரிமை.
கொடுக்க வேண்டும் என்று அவர் நினைத்தால் கொடுக்கட்டும். எங்களுக்கு எந்த ஆட்சேபனை இல்லை. வேறு எந்த கட்சியாவது உதயநிதி அமைச்சராக கூடாது என்று சொன்னார்களா? அமைச்சராக்க வேண்டும் என்று எண்ணினால் அமைச்சராக்கிவிடுங்கள். எந்த அரசியல் கட்சியும் எதிர்க்காது.
அமைச்சராக்க வேண்டும் என்று முதலமைச்சர் நினைத்தால் ஆக்கட்டும். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. இப்போது உள்ள திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக, பக்தர்களிடம் அராஜகமாக செயல்பட்டு வருகிறது. இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை முதலமைச்சர் நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.