அரைபோதையில் உளறுபவர்தான் சீமான்.. கோட்பாட்டு ரீதியாக பதில்கள் இல்லாதவர்.. பொளந்து கட்டிய வன்னி அரசு.

By Ezhilarasan BabuFirst Published Dec 28, 2021, 6:33 PM IST
Highlights

அவர் கொடுக்கும் பேட்டிகளை பார்த்தாலே அது புரியும், ஏதோ குடிபோதையில் அரை போதையில் ஒருவர் பேசுவதை போலவே அவரது பேச்சுக்கள் இருக்கும். எந்த கேள்விக்கும் அவர் முறையாக பதில் சொல்வதை பார்க்க முடியாது. 

எந்த விமர்சனத்திற்கும் கோட்பாட்டு ரீதியாக பதில் சொல்ல இயலாதவர்தான் சீமான், அவருடைய பேச்சுக்கள் அனைத்தும் அரை போதையில் அவர் உளறுவது போலவே நான் பார்க்கிறேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு விமர்சித்துள்ளார். ஆனால் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரின் கருத்துக்களை முன்னெடுத்து செல்பவனாக நான் இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். விடுதலைசிறுத்தைகள் நாம் தமிழர் இடையே கருத்து மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் வன்னியரசு இவ்வாறு கூறியுள்ளார். 

" நான் வளர்ந்ததே விடுதலை சிறுத்தைகள் மேடைகளில் தான்" "எங்களுக்கும் சிறுத்தைகளுக்கும் ஆயிரம் கருத்து மோதல்கள் இருந்தாலும் நாங்கள் இருவரும் அண்ணன் தம்பிகள் என்றும், எனது வழிகாட்டி அண்ணன் திருமாவளவன் தான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வந்ததை அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட சீமானைத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சீமான் பாஜகவின் பி டீம் என்றும் அவர் ஆர்எஸ்எஸ்சின் அடியால் என்றும் விமர்சித்து வருகின்றனர்.  இதுதான் இப்போது அரசியலில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. 

 "சாதி ஒழிப்பே சமூக விடுதலை" "ஆதித்தமிழர் விடுதலையே மீதித்தமிழர் விடுதலை " என விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் பேசி வருகிறது. இதே கொள்கை கோட்பாட்டுடன் திருமாவளவனின் அடியொற்றி சீமான் தமிழ் தேசியம் பேசி வருகிறார். இரண்டு கட்சிகளுமே பாசிசசத்தையும்,  பாஜகவையும் எதிர்ப்பதில் ஒரே புள்ளியில் நிற்கின்றன. இரண்டு தலைவர்களும் பாசிச எதிர்ப்பு பாஜக எதிர்ப்பை கொள்கையாக வைத்து செயல்பட்டு வருகின்றனர். தமிழ்தேசிய களத்தில் ஒன்றுபட்டும் நிற்கும் காட்சிகள் அரசியல்  களத்தில் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கின்றன. தமிழினத்தை தலை நிமிரச் செய்ததே திராவிடம் என திருமாவளவன் பேசும் அதே நேரத்தில்தான், தமிழினம் திராவிடத்தால் விழுந்தது என சீமான் முழங்கி வருகிறார். இவ்விரு கட்சிகளுக்கும் இடையேயான முரண்பாடு இதுதான். ஸ்டாலின் தான் தமிழகத்தில் நம்பிக்கை என திருமாவளவன் பேசினால்,  திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் சீமானும் அவரது தம்பிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த இடத்தில்தான் விடுதலை சிறுத்தைகளுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் சமூக வலைதளத்தில் மோதல் அதிகரித்துவருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வன்னி அரசு சீமானை மிகக்கடுமையாக விமர்சித்து வருகிறார். "சீமான் ஆர்எஸ்எஸ் வைத்த அடியால்" என்றும் தமிழ் தேசியம் என்ற போர்வையில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை புகுத்த முயற்சிக்கிறார் சீமான் என்றும் விமர்சித்து வருகிறார். " பதிலுக்கு திராவிட கைக்கூலி திருமாவளவன்" என்றும், நாம் தமிழர் தம்பிகள் கூறிவருகின்றனர். சாதி ஒழிப்பு தமிழ் தேசியம் என ஒரே புள்ளியில் பயணித்தாலும் விடுதலை சிறுத்தைகளுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே கருத்து மோதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இந்நிலையில்தான் விடுதலைசிறைத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நாம் தமிழர் குறித்தும் சீமான் குறித்தும் பேட்டி ஒன்று அளித்துள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:- 

நாம் தமிழர் இயக்கம் என்பது ஒரு அரசியல் இயக்கம், அது ஒரு போராளிகள் இயக்கமோ, அல்லது படைக்கட்டும் இயக்கமோ அல்ல. சமீபகாலமாக அவரது செயல்பாடுகள் அனைத்தும் முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸின் செயல் திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் இருந்து வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்புதான் பாஜகவுக்கும் அதன் சங்கப் பரிவாரங்களுக்கும் தலைமையாக உள்ளது. அந்த அமைப்புகளில் உள்ள தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் முரண்பட்டு பேசுவார்கள். ஆனால் எல்லா பிரிவுக்கும் இந்து ராஷ்டிரம் அமைப்பதுதான் உச்சபட்ச கொள்கை, நோக்கம். அப்படித்தான் நாம் தமிழர் கட்சியும் எப்படி வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கும். ஆனால் அதன் கொள்கையும் ஆர்எஸ்எஸ் கொள்கைதான். அதனால் தான் ஆர்எஸ்எஸ் சொல்கிற அதே கருவாப்சி கருத்தை சீமான் வேறு வடிவத்தில் தாய்மதம் திரும்புங்கள் என்று அழைக்கிறார். தமிழ்தேசியம் என்ற போர்வையில் பிழைப்பு வாதத்திற்காக பல கருத்துக்களை அவர் சொல்லி வருகிறார். மொத்தத்தில் குழப்பம் ஏற்படுத்துகின்ற ஒரு நகைச்சுவை கூறு தான் நாம் தமிழர் கட்சி.

அவர் கொடுக்கும் பேட்டிகளை பார்த்தாலே அது புரியும், ஏதோ குடிபோதையில் அரை போதையில் ஒருவர் பேசுவதை போலவே அவரது பேச்சுக்கள் இருக்கும். எந்த கேள்விக்கும் அவர் முறையாக பதில் சொல்வதை பார்க்க முடியாது. எதையும் கோட்பாட்டு ரீதியாக, கருத்தியல் ரீதியாக பதில் சொல்ல இயலாதவர் அவர். எந்தக் கேள்வி கேட்டாலும் அதைக் கடந்து போவது, அல்லது அவன் என் தம்பி, இவர் என் அண்ணன் என்று பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவரை எப்போதுமே விடுதலை சிறுத்தைகள் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் தமிழ் தேசியத்தில் மேதகு பிரபாகரன் அவர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரின் கருத்துக்களை தமிழ்நாட்டில் வலிமையாக முன்னெடுத்துச் செல்கின்ற கடப்பாடு என்னைப் போன்றவர்களுக்கு இருக்கிறது. அதில் இவர் குழப்பம் செய்கிறார் என்பதால்தான் இவரை நான் எதிர்க்கிறேன். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் வலிமையான திராவிட இயக்கத்தின் தலைமையில் நாம் ஒன்று சேரவேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் சீமான் போன்றவர்கள் அதை தான் எதிர்க்கிறார்கள். அப்படி என்றால் பாஜகவை வலிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இப்படிப் பேசுகிறார்.

ஒரு மொழி, ஒரு நாடு, ஒரு கலாச்சாரத்தை நிறுவ பாஜக முயற்சி செய்கிறது. அப்படி நிகழ்ந்தால் அது என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை எல்லாம் தெளிவாக உணர்ந்து தான், அதை விசிக 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இருந்து வலிமையாக எதிர்க்கிறோம். பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் என்ன மாதிரி ஆபத்துக்கள் ஏற்படும் என்று நாங்கள் முன்கூட்டியே உணர்ந்து எச்சரித்து வருகிறோம். இதெல்லாம் உணர ஒரு கோட்பாடு புரிதல் வேண்டும். சீமான் போன்ற அரைவேக்காடுகளுக்கெல்லாம் இந்தக் கோட்பாடு தெரியாது. புரியாது. என வன்னியரசு விமர்சித்துள்ளார். 
 

click me!