வாக்கு அரசியலுக்காக மட்டுமே அதிமுக சிறுபான்மையினர் நலன் குறித்து பேசுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் காயல்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்-தின் இறப்பு தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்களது கட்சி தொண்டர்களுக்கு மட்டுமன்றி தமிழக மக்களுக்குமே பெரும் இழப்பாகும். மிகவும் நேர்மையானவர், துணிச்சல் மிக்கவர், மக்கள் நல கூட்டணியில் தன்னோடு பணி புரிந்தவர். உடல் நிலை சரியாக இருந்திருந்தால் அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்க முடியும். இல்லாத காரணத்தினால் மிக பெரிய வாய்ப்புகளை அவர் இழந்துவிட்டார். இதனால் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் நாளை நடைபெற இருந்த ஆர்பாட்டம் ஜனவரி 4ம் தேதி தள்ளிவைக்க படுகின்றது.
undefined
சிறுபான்மையினர் நலன்களுக்கு அனைத்து கட்சியினரும் பாடுபட வேண்டும். குறிப்பாக சனாதன கட்சிகளான பாஜக உள்ளிட்ட கட்சிகள் சிறுபான்மையினருக்கான வெறுப்பு அரசியலை தொடர்ந்து விதைத்து வரும் வேளையில் அனைத்து கட்சிகளுமே இடது சாரிகள், திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் சிறுபான்மை நலன்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. அந்த வகையில் அதிமுக இப்படி ஒரு தீர்மானத்தை நிறை வேற்றியிருப்பதில் வரவேற்றிட கடமை பட்டிருக்கிறோம்.
கேப்டன் விஜயகாந்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
ஆனால் இதுவும் ஒரு அரசியல் நாடகமாக இருக்குமோ என்கிற அச்சம் இருக்கிறது. பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்பதை காட்டி கொள்வதற்காக ஒரு முயற்சியாக இது இருக்கலாம். மேலும் அதிமுகவும், பாஜாகவும் சேர்ந்து கூட இத்தகைய திட்டத்தினை தீட்டிருக்கலாம். நாம் சேர்ந்திருந்தால் சிறுபான்மையினர் வாக்குகள் மொத்தமாக திமுகவிற்கு சென்றுவிடும் எனவே நாம் விலகி இருப்பது போல் விலகி இருப்போம் அப்போது தான் தலீத் மக்களின் வாக்குகளும், சிறுபான்மையினர் வாக்குகளும் திமுகவிற்கு போகாமல் இருக்கும். அதனை முற்றிலும் சிதறடிக்க முடியும் என்று கூட எண்ணி கணக்கு போட்டிருக்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பாஜாகவை விட்டு அதிமுக வெளியே வருவதற்கு கொள்கையின் அடிப்படையில் அதிமுக வெளியே வரவில்லை. அண்ணாமலை என்கிற தனிப்பட்ட நபரால் தான் அவர்கள் வெளியே வந்துள்ளனர். அதிமுக, பாஜகவிற்கான இடைவெளி என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை. எனவே அவர்கள் சிறுபான்மையினரிடம் நலன் குறித்து அதிமுக பேசுவது என்பது வாக்கு வங்கி அரசியலுக்காக தான் என்று வெளிப்படையாக தெரிகிறது. குறிப்பாக கிறித்தவர், இசுலாமியர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இன்று இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால் அது இந்திய கூட்டணியால் தான் முடியும். இந்தியா வெற்றி பெற வேண்டுமானால் தமிழ்நாட்டில் திமுகவிற்கு சிறுபான்மையினர் 100 விழுக்காடு வாக்குகளை அளிக்க வேண்டிய தேவையுள்ளது.
ஆட்சியரின் காரை துரத்தி சென்று மடக்கி பிடித்த எம்எல்ஏவால் புதுவையில் பரபரப்பு
இந்திய கூட்டணியில் எந்த கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் கூட இந்த 28 கட்சிகளும் ஒரே அணியில் ஒன்றிணைந்து வரக்கூடிய தேர்தலை எதிர்கொள்வோம். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மழையினால் பாதிக்க பட்ட மக்களுக்கு ஒரு நிவாரணம் கூட வழங்கவில்லை. பாஜக சார்பில் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. இந்திய ஒன்றிய அமைச்சர் வருகிறார். ஒரு ஆயிரம் பேருக்காவது நிவாரணம் வழங்குவதற்கான ஒரு எண்ணம் கூட வரவில்லை. அவர்கள் எப்படிபட்ட உளவியலை கொண்டிருக்கிறார்கள் என்பது தெறிகிறது. பார்வையிடுவதற்கு முன்னரே தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று கூறுகிறார் என்றால் பிரதமருக்கும் மேலானவர் என்கிற எண்ணத்தோடு அந்த தோற்றத்தை உருவாக்கிட முயற்சிக்கிறாரா என்று கேள்வி எழுகிறது என்றார்.