ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு… ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திருமா உள்ளிட்ட விசிகவினர் கைது!!

By Narendran SFirst Published Jan 13, 2023, 7:09 PM IST
Highlights

தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் விசிக கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். 

தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் விசிக கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக கடந்த 9 ஆம் தேதி நடப்பாண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்த அறிக்கையில் சில வார்த்தைகளை சேர்த்தும், விடுத்தும் படித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரால் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்னும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை படித்துக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார்.

இதையும் படிங்க: பாஜக தொண்டனாக கூட இருக்கலாம் ஆனால் ஆர் எஸ் எஸ் தொண்டனாக மட்டும் இருக்கக் கூடாது..! திருமாவளவன் ஆவேசம்

ஆளுநரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் இன்று (ஜன.13)  நடைபெற்றது. இதில் விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்று ஆளுநருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய ரவிக்குமார், ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு செல்பவர்கள், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று ஆளுநர் பேசுவது, சட்டவிரோதமானது என்றார்.

இதையும் படிங்க: விவசாய நிலம் பாதிப்புக்கு அப்போ 30 ஆயிரம்..! இப்போ 13 ஆயிரமா..? திமுக அரசை இறங்கி அடிக்கும் எஸ்.பி.வேலுமணி

அவரை தொடர்ந்து பேசிய திருமாவளவன், கேரளா, மேற்குவங்கம் மாநிலங்களை போன்று, தமிழ்நாட்டிலும் ஆளுநர் இல்லாமல் பேரவை கூட்டங்களை நடத்த வேண்டும். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், பாஜக ஆதரவாளர்களை ஆளுநராக நியமிக்க கூடாது. ஆளுநர் வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என்றார். இதனிடையே காவல்துறை தடையை மீறி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

click me!